எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் முடக்கம் செய்யும் வசதி விரைவில் நீக்கப்பட இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இது பயனர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் செயலியை ஜாக் டோர்சி, நோவா கிளாஸ், பிஸ் ஸ்டோன் மற்றும் இவான் வில்லியம்ஸ் ஆகியோரால் 2006-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது . இதையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஓ-வாக பொறுப்பேற்ற அவர், பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். பணி நடைமுறைகள் சார்ந்த புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்தார். பயனாளர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை அவர் அறிவித்தார்.
அந்த வகையில் தற்போது மற்றொரு மாற்றத்தை கொண்டு வர இருப்பதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இனி எக்ஸ் பயனர்கள் தங்களுக்கு பிடிக்காத பயனர்களின் கணக்குகளைப் முடக்கம் செய்ய முடியாது. அவர்களிடமிருந்து வரும் குறுஞ்செய்திகளை மட்டுமே(MUTE) தடைச் செய்ய இயலும். அவர்களது பதிவுகள் நமது கால அட்டவணையில் வருவதை தடுக்க இயலாது. இந்த அறிவிப்பு எக்ஸ் பயனர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது எக்ஸ் தளத்தில் இருக்கும் ப்ளாக்கிங் வசதியின் மூலம் பயனர்களின் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகள் இரண்டையுமே தடுக்க முடியும். இந்த வசதியை நீக்குவதால் பின்னூட்டங்களில் வரும் வசைச் சொற்களையும், ஆபாச தாக்குதல்களை தடுக்க முடியாமல் போய்விடும் என்று பயனர்கள் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் ஏற்கெனவே முடக்கம் செய்யப்பட்ட பயனர்களின் கணக்குகளும் தானாகவே அன்ப்ளாக் ஆகுமா? என்பது குறித்து இன்னும் விளக்கமளிக்கப்படவில்லை.
அதுமட்டுமின்றி, முடக்கம் வசதியை நீக்குவது, ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் ஆகியவற்றின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மீறுவதாக அமையும். மேலும் இதனால் எக்ஸ் செயலி இந்த இரண்டு தளங்களில் இருந்தும் நீக்கப்பட வாய்ப்பு உண்டு என தெரியவருகிறது. ஆப்பிள் ஸ்டோர் மற்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் இரண்டிலும் பயனர்கள் எதிர்கொள்ளும் ஆன்லைன் தாக்குதல்களை வடிகட்டும் வசதிகளைச் செயலிகள் கட்டாயமாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது குறிப்பிடத்தக்கது.
Pretty fun blocking people who complain that blocking is going away.
How does the medicine taste? 😂😂
— Elon Musk (@elonmusk) August 20, 2023