மீம்ஸ் மூலம் இணையத்தில் சில வருடங்களாக பிரபலமாக இருந்த சீம்ஸ் நாய், புற்றுநோய் பாதிப்பால் மரணம் அடைந்தது.
சீனாவின் ஹாங்காங்கைச் சேர்ந்த நாய், பால்ட்ச. இந்த நாயின் உரிமையாளர் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்றைத் தொடங்கி அதில் இதன் புகைப்படங்களை பதிவிட்டுவந்தார். அதன் முகபாவனைகள் அனைத்தும் இணையதளத்தில் வைரலானது.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களுக்குச் சீம்ஸ் நாயைத் தெரியாமல் இருக்கமுடியாது. மீம்ஸ்களில் அடிக்கடி இந்த நாயின் முகத்தைப் பார்க்கலாம். கேலியான பதிவுகளில் இந்த நாயின் படத்தை பலரும் பகிர்வது வழக்கம்.
கடந்த 2017-ஆம் ஆண்டு பால்ட்சே என்ற பெயர் கொண்ட ஷிபா இனு இனத்தைச் சேர்ந்த இந்த நாயின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் உரிமையாளர் இந்த நாயின் புகைப்படங்களை பதிவேற்றுவதற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கும் அளவுக்கு இந்த நாய் பிரபலமானது. இயற்கையாகவே சிரிப்பது போன்ற முக அமைப்பை கொண்ட இந்த நாயை நெட்டிசன்கள் ‘சீம்ஸ்’ என்று பெயர் வைத்து அழைத்தனர்.
இந்நிலையில் மீம்ஸ் கிரியேட்டர்கள், இந்த நாய்க்கு செல்லமாக சீம்ஸ் எனப் பெயரிட்டு காமெடி வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்டனர். அவை பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்தது. இவ்வாறு சீம்ஸ் நாய் உலகம் முழுவதும் பிரபலமான நிலையில் சீம்ஸூக்கு திடீரென புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டுவந்த சீம்ஸ் நாய், கடந்த 18ஆம் தேதி தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கண்விழிக்கவில்லை என்று அதன் உரிமையாளர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை அதற்கு, தோராசென்டெசிஸ் என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு பிறகு சீம்ஸ் கண் விழிக்கவில்லை. சீம்ஸை பரிசோதித்த டாக்டர்கள், சீம்ஸ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது சீம்ஸ் உரிமையாளர் மட்டுமல்லாமல் உலகில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இதற்கு மீம்ஸ் கிரியேட்டர் உள்பட அனைத்து நெட்டிசன்களும் கவலை தெரிவித்துள்ளனர்.