“பிரிக்ஸ்” அமைப்பில் கூடுதலாக 6 நாடுகள்: பிரதமர் மோடி தகவல்!
Mar 16, 2026, 07:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“பிரிக்ஸ்” அமைப்பில் கூடுதலாக 6 நாடுகள்: பிரதமர் மோடி தகவல்!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 24, 2023, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பிரிக்ஸ்” நாடுகளின் கூட்டமைப்பில், சவூதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம், ஈரான், அர்ஜெண்டினா, எகிப்து ஆகிய 6 நாடுகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

“பிரிக்ஸ்” கூட்டமைப்பின் 15-வது உச்சி மாநாடு, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகையில், “பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் சவூதி அரேபியா, ஐக்கிய அரசு அமீரகம், ஈரான், எகிப்து, அர்ஜெண்டினா, எத்தியோப்பியா ஆகிய 6 நாடுகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உறுப்பினர் சேர்க்கை 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் நடைபெறும்.

பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 நாடுகளையும் வரவேற்கிறேன். அந்நாடுகளின் தலைவர்களுக்கும், மக்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட நாடுகளுடன் நெருங்கிய உறவுகளையும், வரலாற்று உறவுகளையும் கொண்டிருக்கும். ஆர்வத்தை வெளிப்படுத்தும் நாடுகளை சேர்ப்பதற்கும், மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கும் தயாராக இருக்கிறோம்.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நேற்று நிலவில் மெதுவாக தரை இறங்கியது. சந்திரயான் வெற்றி இந்தியா சார்ந்தது மட்டுமல்ல. இந்த வெற்றிக்குப் பின்னால் உலக நாடுகளின் விஞ்ஞானிகளின் பங்களிப்பும் இருக்கிறது. ஆகவே, இந்திய மக்கள் சார்பிலும், இந்திய விஞ்ஞானிகள் சார்பிலும் உலக விஞ்ஞானிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுத் தருணத்திற்கு வாழ்த்துகள்.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் நடந்த இந்த 3 நாள் சந்திப்பில் பல முடிவுகள் எடுக்கப்பட்டதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். பிரிக்ஸ் அமைப்பின் விரிவாகத்துக்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருகிறது. இந்த ஆதரவு இனியும் தொடரும். பிரிக்ஸ் கூட்டமைப்பின் விரிவாக்கம், நவீனமயமாக்கல் ஆகியவை தற்போது முக்கிய தேவையாகும்” என்றார்.

Tags: PM Modi
ShareTweetSendShare
Previous Post

ஜார்கண்ட் நிதியமைச்சர் மகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Next Post

பிரதமர் மோடியின் தேசப்பற்று: மெய்சிலிர்த்த தென்னாப்பிரிக்க அதிபர்!

Related News

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

Load More

அண்மைச் செய்திகள்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies