“கலாச்சாரப் பாரம்பரியம் என்பது…” ஜி20 மாநாட்டில் பாடம் நடத்திய பிரதமர் மோடி!
Oct 17, 2025, 06:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

“கலாச்சாரப் பாரம்பரியம் என்பது…” ஜி20 மாநாட்டில் பாடம் நடத்திய பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Aug 26, 2023, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலாச்சாரப் பாரம்பரியம் என்பது வெறும் கல்லில் போடப்படுவது மட்டுமல்ல, தலைமுறைத் தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகள் என்று ஜி20 கலாச்சார உச்சி மாநாட்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு, செப்டம்பர் 9, 10-ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, ஜி20 அமைப்பின் பல்வேறு பிரிவுகளின் உச்சி மாநாடு, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜி20 அமைப்பின் கலாச்சார உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கலாச்சாரத்துறை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதில், காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “எனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசியில் நாங்கள் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். காசி என்பது உலகின் மிகப் பழமையான நகரம் மட்டுமல்ல, புத்தர் தனது முதல் பிரசங்கத்தை வழங்கிய சரநாத், இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை. இது உண்மையில் இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார தலைநகரமாகும். கலாச்சாரம், ஒன்றிணைவதற்கான உள்ளார்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளது. பலதரப்பட்ட பின்னணிகளையும், கண்ணோட்டங்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்தியாவில் உள்ள நாம், நமது நித்திய மற்றும் பன்முக கலாச்சாரத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். நமது அருவமான கலாச்சாரப் பாரம்பரியத்திற்கும் நாங்கள் பெரும் மதிப்பைக் கொடுக்கிறோம்.

கலாச்சாரப் பாரம்பரியம் என்பது வெறும் கல்லில் போடப்படுவது மட்டுமல்ல, தலைமுறைத் தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகள். பண்டிகைகளும் கூட தலைமுறையாகக் கடைப்பிடிக்கப்படும் மரபுகள்தான். பொருளாதார வளர்ச்சிக்கும், பல்வகைப்படுத்தலுக்கும் பாரம்பரியம் இன்றியமையாத சொத்து என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவில் உள்ள நாங்கள், எங்களின் பல்வேறு கலாச்சார பாரம்பரியத்தைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறோம். நாட்டின் தொலைதூர மூலைகளில் உள்ள கலாச்சார சொத்துக்கள் மற்றும் கலைஞர்களை இந்தியா அங்கீகரிக்கிறது. இந்த உச்சிமாநாடு நாட்டின் வளமான கலாசாரச் சித்திரங்களைப் பாதுகாத்து, காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும்.

நமது கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் பல மையங்களை நாங்கள் உருவாக்கி வருகிறோம். வரவிருக்கும் மாதத்தில், இந்தியா 1.8 பில்லியன் டாலர் ஆரம்ப ஒதுக்கீட்டில் ‘பிரதான் மந்திரி விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தைத் தொடங்கும். இந்த முயற்சி பாரம்பரிய கைவினைஞர்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று கூறினார்.

Tags: PM Modipm modi latest speech
ShareTweetSendShare
Previous Post

அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு: விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அதிரடி!

Next Post

மதுரை இரயில் விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு அண்ணாமலை இரங்கல்!

Related News

தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

பணி நிரந்தரம் ஆன 2,000 ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 3 மாத ஊதியம் வழங்கப்படாத விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

கண்துடைப்புக்காக, ஆணையம், குழு என அமைத்து மக்கள் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

கரூர் துயரச் சம்பவத்தில் எதை மறைக்கப் பார்க்கிறது திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

கடலூர் அருகே மின்னல் தாக்கி 4 பெண்கள் உயிரிழப்பு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

நெல்லையில் ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க கோரி மாகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

பேரவையில் அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் இருக்கை முன் தர்ணா!

கோவை ஜி.டி.நாயுடு மேம்பால சாலை பாதுகாப்பை சீர்படுத்த நடவடிக்கை தேவை – வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – சென்னை காவல் ஆணையருக்கு நோட்டீஸ்!

ஐப்பசி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

தவெக கூட்ட நெரிசல் வழக்கு – கரூர் வந்த சிபிஐ அதிகாரிகள்!

கோவையில் மயக்க ஊசி செலுத்தி ரோலக்ஸ் காட்டு யானையை மடக்கிய வனத்துறையினர்!

சட்டவிரோத கல்குவாரி – தகவல் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்!

திருமாவளவன் கார் மோதிய விவகாரம் – வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு!

மதுரை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம் – மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு!

54-ம் ஆண்டில் அதிமுக – ராயப்பேட்டை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies