அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு: விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அதிரடி!
Oct 16, 2026, 11:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

அரிசி ஏற்றுமதிக்கு 20% வரி விதிப்பு: விலை உயர்வை தடுக்க மத்திய அரசு அதிரடி!

Murugesan M by Murugesan M
Aug 26, 2023, 05:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வெளிநாட்டு ஏற்றுமதியை குறைத்து, உள்நாட்டில் அரிசி விலையை கட்டுப்படுத்தும் வகையில், அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20 சதவிகிதம் வரி விதித்திருக்கிறது.

இந்திய மக்களின் முக்கிய உணவாக இருப்பது அரிசிதான். ஆனால், இந்தியாவில் பதிவாகிவரும் நிலையற்ற மழை காரணமாக, கடந்த சில வருடங்களாக விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எல் நினோ வேறு அச்சுறுத்தி வருகிறது. இதனால், உள்நாட்டுச் சந்தையில் அரிசி விலை உயர வாய்ப்பு இருக்கிறது. இதன் தாக்கம், சில்லறை பண வீக்கத்தில் அதிகளவு எதிரொலிக்கும். இதை முன்கூட்டியே கணித்த மத்திய அரசு, ஏற்றுமதிக்கான தடை மற்றும் வரி விதிப்பு ஆகிய ஆயுதங்களை கையில் எடுத்திருக்கிறது.

அந்த வகையில், பாசுமதி தவிர்த்த வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு சமீபத்தில் தடை விதித்தது. தற்போது, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவிகிதம் வரி விதித்திருக்கிறது. சர்வதேச அளவில் புழுங்கல் அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமானது. 2022-ம் ஆண்டில் மொத்த அரிசி ஏற்றுமதியில் புழுங்கல் அரிசியின் ஏற்றுமதி மட்டும் 7.4 மில்லியன் டன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர, இந்தியாவில் அரிசி விலை ஏற்கெனவே 11 வருடங்களாக இல்லாத அளவுக்கு உச்சத்தில் இருக்கிறது.

ஆகவே, அரிசி ஏற்றுமதிக்கான தடை மற்றும் வரி விதிப்பு போன்றவை உள்நாட்டில் விலை உயர்வை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் மாதம் முதல் உணவு பணவீக்கம் குறைய வாய்ப்பு இருக்கிறது. சர்வதேச அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா முக்கிய நாடாக இருக்கும் நிலையில், அரிசிக்கான தடையும், வரி விதிப்பும் உலகளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ஏற்கெனவே, சீனாவில் மழை, வெள்ளம் காரணமாக, அந்நாட்டின் அரிசி உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஓட்டுமொத்த தென்கிழக்கு நாடுகளிலும் அரிசி விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: central government
Share
Tweet
SendShare
Previous Post

பில்லியன் டாலர் செயற்கைக்கோள் சந்தை: ஆதிக்கம் செலுத்துமா ? இந்தியா.

Next Post

“கலாச்சாரப் பாரம்பரியம் என்பது…” ஜி20 மாநாட்டில் பாடம் நடத்திய பிரதமர் மோடி!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies