தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ரா!
Mar 15, 2026, 09:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தங்கம் வென்ற தங்கமகன் நீரஜ் சோப்ரா!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 11:24 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவில் முதல் முறையாக தங்கம் வென்று இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதுவரை உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்கு  2 பதக்கங்களே கிடைத்துள்ளது. 2003ஆம் ஆண்டு நீளம் தாண்டுதலில் அஞ்சு ஜார்ஜ் வெண்கலப் பதக்கமும், கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

இந்த ஆண்டு, ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். இவர் மட்டுமல்லாமல் இந்தியாவின் கிஷோன் ஜீனா மற்றும் டிபி மனு ஆகியோரும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். இதனால் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்கும் என்று ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு நடைபெற்ற ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 2வது முயற்சியிலேயே 88.17 மீ தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். இவருக்கு பின் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 87.82 மீட்டர் தூரத்திற்கு வீசினார்கள். தொடர்ந்து செக் குரியரசின் ஜேக்கர் வேட்லெச் 86.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார். 2வது முயற்சி முதல் கடைசி முயற்சி வரையிலும் இந்தியாவின் நீரஜ் சோப்ராவே முன்னிலையில் இருந்தார்.

இதன் மூலம் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்று, நீரஜ் சோப்ரா புதிய வரலாறு படைத்துள்ளார்.

இதுவரை உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர்களில் யாரும் தங்கம் வென்றதே இல்லை. அதனை மாற்றி, நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் .

காமன்வெல்த், ஆசியப் போட்டிகள், ஒலிம்பிக் போட்டிகள், டைமண்ட் லீக் போட்டிகள் என்று நீரஜ் சோப்ரா அத்தனை தொடர்களிலும் தங்கம் வென்றிருந்த நிலையில், தற்போது உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடரிலும் தங்கம் வென்று சாதித்துள்ளார். நீரஜ் சோப்ராவின் வெற்றியைத் தொடர்ந்து  அவருக்கு வாழ்த்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன

Tags: indian sports personalityneeraj chopraworld athelecticsjavelin throwindia sports
ShareTweetSendShare
Previous Post

சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்றடைந்த 4 வீரர்கள்!

Next Post

சந்திரயான்-3 வெற்றி பெண் சக்திக்கான உயிர்ப்பு: பிரதமர் மோடி பெருமிதம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies