ஆதித்யா எல்-1: நேரத்தை அறிவித்தது இஸ்ரோ!
Sep 4, 2026, 11:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதித்யா எல்-1: நேரத்தை அறிவித்தது இஸ்ரோ!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 28, 2023, 06:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று, இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-3 விண்கலம் வெற்றியால் இஸ்ரோ அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறது. மேலும், குறைந்த செலவில் மிகப்பெரிய விண்வெளிச் சாதனையை படைத்து, வல்லரசு நாடுகளுக்கு இந்தியா சவால் விட்டிருக்கிறது. இதனால், ஒட்டுமொத்த உலக நாடுகளும் இஸ்ரோவின் ஆராய்ச்சி மற்றும் தொலைநோக்கு திட்டங்களைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி இருக்கின்றன.

இந்த நிலையில், சூட்டோடு சூடாக  சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் ஆதித்யா எல்-1 விண்கலத்தை செலுத்த இஸ்ரோ தயாராகி விட்டது. பி.எஸ்.எல்.வி-சி57 ராக்கெட் மூலம் செப்டம்பர் 2-ம் தேதி காலை 11.50 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்தில் இருந்து சூரியனை நோக்கி ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த நிகழ்வை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர். இதற்காக https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

🚀PSLV-C57/🛰️Aditya-L1 Mission:

The launch of Aditya-L1,
the first space-based Indian observatory to study the Sun ☀️, is scheduled for
🗓️September 2, 2023, at
🕛11:50 Hrs. IST from Sriharikota.

Citizens are invited to witness the launch from the Launch View Gallery at… pic.twitter.com/bjhM5mZNrx

— ISRO (@isro) August 28, 2023

இந்த ஆதித்யா எல்-1 விண்கலத்தில் மொத்தம் 7 விதமான PayLoads இடம்பெற்றிருக்கும். இது சூரியனை தொலைவில் இருந்தபடியே ஆய்வு செய்யவுள்ளது. அதாவது, ஹாலோ எல்-1 என்ற சூரியனின் சுற்றுவட்டப் பாதைக்குச் சென்று ஆய்வை மேற்கொள்ளும். இதற்காக எல்.வி.எம்-3 என்ற ராக்கெட் விண்ணில் அனுப்பப்பட உள்ளது. ஹாலோ எல்-1 சுற்றுவட்டப் பாதையை அடைந்ததும் இஸ்ரோவிற்கு தகவல் அனுப்பத் தொடங்கிவிடும்.

சூரியனின் மேற்பகுதி எப்படி இருக்கிறது? இதிலிருந்து வெளிப்படும் வெப்பம்? சூரிய வெளிச்சம்? உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆய்வு செய்யவுள்ளது. மேலும், சூரியனின் 3 விதமான படலங்களையும் ஆய்வு செய்கிறது. சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ பிரத்யேகமாக அனுப்பப்படும் முதல் விண்கலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிபெற்றால் விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவும், இந்தியாவும் புதிய மைல்கல்லை எட்டும் என்பதில் சந்தேகமில்லை.

Tags: ISROaditya l1
Share
Tweet
SendShare
Previous Post

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உடன் கென்யாவின் பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!

Next Post

பள்ளத்தைப் பார்த்த ரோவர்: பாதையை மாற்றி பயணம்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies