இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ள கென்யாவின் பாதுகாப்பு செயலாளர் ஏடன் பேரே டுவால் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நாளை சந்திக்கிறார்.
கென்யாவின் பாதுகாப்பு செயலாளர் ஏடன் பேரே டுவால் இந்தியாவிற்கு மூன்று நாள் பயணமாக வந்துள்ளார். இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ள அறிக்கையில், கென்யாவின் பாதுகாப்பு செயலாளர் ஏடன் பேரே டுவால் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். 2016ம் ஆண்டு ஜூலை 10, 11 தேதிகளில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் கென்யா பயணம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. தற்போது ஏடன் பேரே டுவால் வருகை இரு நாடுகளுக்கான உறவை மேம்படுத்த ஏதுவாக அமையும். இது அவருடைய முதல் இந்தியப் பயணம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியா- கென்யா வலுவான மற்றும் பன்முகத் தன்மை கொண்ட கடல்சார் அண்டை நாடுகளாகும். அதனை மேலும் பலப்படுத்தும் விதமாகக் கோவா மற்றும் பெங்களூரில் உள்ள கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பாதுகாப்புத் தொழிற்சாலைகளை ஏடன் பேரே டுவால் பார்வையிட உள்ளார். மேலும் அவர் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை நாளை சந்திக்க உள்ளார்.
2016ம் ஆண்டு கென்யா பயணத்தின் போதுப் பிரதமர் மோடியும், கென்யா அதிபர் உஹுரு கென்யா டாடாவும் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து இருநாடுகளுக்கு இடையே 7 ஒப்பதங்கள் கையெழுத்திடப்பட்டன. கென்யாவின் பாதுகாப்புப் படைக்கு 30 அவசர ஊர்திகளைப் பிரதமர் மோடி இந்தியா சார்பில் வழங்கினார். அதனுடைய தொடர்ச்சியாக, இந்திய பாதுகாப்புத் துறை தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத்சிங் உடனான கென்யாவின் பாதுகாப்பு செயலாளரின் சந்திப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.