"ஸ்மைல் ப்ளீஸ்": நிலவில் ரோவர் எடுத்த லேண்டர் புகைப்படம்!
Jan 14, 2026, 03:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

“ஸ்மைல் ப்ளீஸ்”: நிலவில் ரோவர் எடுத்த லேண்டர் புகைப்படம்!

Murugesan M by Murugesan M
Aug 30, 2023, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நிலவில் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ரோவர், தன்னைச் சுமந்து வந்த லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. இதற்கு “ஸ்மைல் ப்ளீஸ்” என்று தலைப்புக் கொடுத்து இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி இந்தியா விண்ணில் செலுத்தியது. 40 நாட்கள் பயணத்துக்குப் பிறகு, கடந்த 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் லேண்டரில் இருந்து வெளியே வந்த பிரக்ஞான் ரோவர், நிலவில் இறங்கி தனது ஆராய்ச்சியைத் தொடங்கி இருக்கிறது. முதலில் நிலவின் மேற்பரப்பில் பயணித்தவாறே ஆய்வில் ஈடுபட்ட ரோவர், பின்னர் நிலவில் சுமார் 10 செ.மீ. ஆழத்துக்கு துளையிட்டு சோதனை செய்தது.

அதேபோல, தனது பயணத்தின்போது வழியில் 4 மீட்டர் விட்டம் கொண்ட பள்ளத்தைப் பார்த்து திகைத்த ரோவர், பிறகு தனது பாதையை மாற்றி பயணித்து வருகிறது. அந்த வகையில், தனது சோதனையின் ஒரு பகுதியாக நிலவில் கந்தகம் இருப்பதைக் கண்டுபிடித்து தகவல் அனுப்பியது.

மேலும், இஸ்ரோ மையத்துக்கு ரோவர் அனுப்பிய தகவலில், “நான் சந்திரனின் ரகசியங்களை வெளிக்கொணரப் போகிறேன் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த விரும்புகிறேன். நானும் எனது நண்பர் விக்ரம் லேண்டரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறோம். சிறந்தவை விரைவில் வரும்” என்று தெரிவித்திருந்தது.

Chandrayaan-3 Mission:

Smile, please📸!

Pragyan Rover clicked an image of Vikram Lander this morning.

The 'image of the mission' was taken by the Navigation Camera onboard the Rover (NavCam).

NavCams for the Chandrayaan-3 Mission are developed by the Laboratory for… pic.twitter.com/Oece2bi6zE

— ISRO (@isro) August 30, 2023

அதேபோல, தனது பயணத்தின்போது கண்ணில் படும் காட்சிகளை எல்லாம் புகைப்படங்கள் எடுத்து அனுப்பி வருகிறது ரோவர். அந்த வகையில், தனது நண்பரான விக்ரம் லேண்டரை, ரோவர் புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது.

இந்த புகைப்படத்தை “ஸ்மைல் ப்ளீஸ்” என்று தலைப்பிட்டு இஸ்ரோ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது. அப்பதிவில், “பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. ரோவரில் உள்ள நேவிகேஷன் கேமரா மூலம் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

சந்திரயான்-3 விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் நேவிகேஷன் கேமராவானது எலெக்ட்ரோ ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் ஆய்வுக் கூடத்தில் தயாரிக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: chandrayaan 3 latest news
ShareTweetSendShare
Previous Post

சென்னை திரும்பிய பிரக்ஞானந்தாவுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies