சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்றி காரணமாகத் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில், இன்று சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எழும்பூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், சென்ட்ரல், சேத்துப்பட்டு, கொளத்தூர், கேகே நகர், கிண்டி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதேபோல், பொன்னேரி, செங்குன்றம், புழல் ஆகிய பகுதிகளிலும் மழை பெய்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், சாலைகளில் பெருக்கெடுத்த நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.