குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் மற்றும் டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர் செப்டம்பர் 01, 2023 அன்று மும்பை பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
குடியரசுத் துணைத்தலைவர் மசகான் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டுள்ள ‘மகேந்திரகிரி’ போர்க்கப்பல் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
இக்கப்பல் இந்திய கடற்படையின் 17-A திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஏழாவது போர்க்கப்பல் மற்றும் மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் கட்டிய நான்காவது கப்பலாகும். மேலும், தனது பயணத்தின் போது, குடியரசுத் துணைத்தலைவர் மசகான் கப்பல் கட்டும் தளத்திலுள்ள பாரம்பரிய அருங்காட்சியகமான ‘தாரோஹர்’-ஐ பார்வையிடுகிறார்.