ஆவணி பிரதோஷம் – நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை!
Jul 30, 2026, 05:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆவணி பிரதோஷம் – நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை!

Sivasubramanian P by Sivasubramanian P
Aug 30, 2023, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷ தினத்தையொட்டி, திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில், பெரிய நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் திகழ்ந்து வருவது திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில்.

இந்த திருக்கோவிலில், ஆவணி மாத சோமவார வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, நந்தியம் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

இதில், மஞ்சள் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, அரிசி மாவு மற்றும் ஆயிரம் லிட்டர் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, நந்தியம் பெருமானுக்கு வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் மற்றும் அருகம்புல் ஆகிய பூக்களால் மாலை அணிவித்துச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சங்கொலி முழங்க பஞ்சமுகத் தீபாராதனை நடைபெற்றது.

பிரதோஷம் அன்று நந்தியும் பெருமானை வழிப்பட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியமும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியமும் கிட்டும், சகல ஐஸ்வர்யங்கள் கிட்டும், தோஷங்கள் விலகும், நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

இதனால், அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில், திருவண்ணாமலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியையும், நந்தியம் பெருமானையும் மனம் உருக தரிசனம் செய்தனர்.

இதேபோல, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு பிரதோஷ வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

Tags: temple
ShareTweetSendShare
Previous Post

‘மகேந்திரகிரி’ போர்க்கப்பல் தொடக்க விழா!

Next Post

ஹயக்கீரிவா் ஜெயந்தி: முத்து ஆபரணத்தில் ஸ்ரீ லெஷ்மி ஹயக்கீரிவா்!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies