ஓமனில் சலாலாவில் நடைபெற்ற ஆடவர் ஆசியா ஹாக்கி 5வது உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் இந்தியா, வங்காளதேசத்தை 15-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மனிந்தர் சிங் 4 முறை கோல் அடித்து ஆட்டத்திலேயே அதிக கோல் அடித்தவராக விளங்கினார். முகமது ரஹீல் 3 கோல்களும், சுக்விந்தர், குர்ஜோத் சிங் மற்றும் பவன் ராஜ்பர் ஆகியோர் தலா இரண்டு கோல்களும் எடுத்து தங்களின் பங்களிப்பைச் சரியாக வழங்கி வந்தனர். மேலும் மன்தீப் மோர் மற்றும் டிப்சன் டிர்கி ஆகியோர் ஆளுக்கு 1 கோலை அடித்து தங்களின் பங்களிப்பையும் கொடுத்தனர். வங்காளதேசத்தில் சவோன் சரோவர் அவரது அணிக்காக ஒரு கோலை அடித்தார்.
மனிந்தர் சிங் 10, 18, 28, 30 ஆகிய நிமிடங்களில் தன்னுடைய நான்கு கோல்களையும் அடித்தார். முகமது ரஹீல் 2, 15, 24 நிமிடங்களில் தன்னுடைய மூன்று கோல்களையும் எடுத்தார். பவன் ராஜ்பர் 19, 26 ஆகிய நிமிடங்களில் தன்னுடைய இரண்டு கோல்களையும் அடித்தார். குர்ஜோத் சிங் 13, 23 நிமிடங்களில் தன்னுடைய இரண்டு கோல்களையும் அடித்தார். சுக்விந்தர் 13, 22 ஆகிய நிமிடங்களில் தன்னுடைய இரண்டு கோல்களையும் அடித்தார். மன்தீப் மோர் தன்னுடைய 8 வது நிமிடத்தில் கோலை அடித்தார். டிப்சன் டிர்கி ஒன்பதாவது நிமிடத்தில் கோல் அடித்தார்.
மேலும் வங்காளதேசத்தில் சவோன் சரோவர் ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார். ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே கோல் அடித்ததும் இன்னும் நிறைய கோல் அடிப்பார்கள் என்று இரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அதுவே வங்காளதேசத்தின் கடைசி கோலாக அமைந்தது. ஆகையால் இந்தியா 15-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.