இரஷ்யா, வடகொரியா இராணுவப் பேச்சுவார்த்தை
Aug 22, 2025, 10:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரஷ்யா, வடகொரியா இராணுவப் பேச்சுவார்த்தை

Web Desk by Web Desk
Aug 31, 2023, 01:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இரஷ்யாவும் வட கொரியாவும் , பீரங்கி உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களுக்கு வெடிமருந்துகளை வழங்கும் ஆயுத ஒப்பந்தம் பற்றிய தங்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றன என்று அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த உளவுத்துறை, பீரங்கி உட்பட பல்வேறு வகையான ஆயுதங்களுக்கு வெடிமருந்துகளை வழங்கும் ஆயுத ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தைகளை இரஷ்யாவும் வட கொரியாவும் முன்னெடுத்து வருகின்றன என்று தெரிவித்துள்ளது. எனினும், இதனை வட கொரியா மறுத்திருக்கிறது. அதேசமயம், கடந்த மாதம் இரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜி ஷோய்கு வட கொரியாவுக்குப் பயணம் செய்ததைத் தொடர்ந்து, இரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகள் குழு பியோங் யாங்கிற்கு பயணம் செய்ததாக இரஷ்யா தெரிவித்துள்ளது.

தற்போது பயணம் செய்துள்ள 2-வது குழுவைத் தவிர, இரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னும், இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதாக உறுதியளித்து கடிதங்களைப் பரிமாறிக்கொண்டதாகத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் மூலோபாய தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபற்றி ஜான் கிர்பி கூறுகையில், “உக்ரைனில் உள்ள இரஷ்ய இராணுவப் படைகளுக்கு ஆதரவை வழங்குவது குறித்து வட கொரியா தொடர்ந்து பரிசீலித்து வருகிறது. மேலும், இரஷ்யாவிற்கும் வட கொரியாவுக்கும் இடையேயான ஆயுதப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக முன்னேறி வருகின்றன. இது தொடர்பான இந்த பேச்சுவார்த்தைகள் உயர்மட்ட ஆலோசனை இனிவரும் மாதங்களில் தொடரலாம்.

மேற்கத்தியப் பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக இரஷ்யாவின் முயற்சிகளையும் அதன் போருக்கான ஆதார ஆயுதங்களையும் தொடர்ந்து விளம்பரப்படுத்த இரஷ்யாவின் புதின் நிர்வாகம் எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பதற்கு இது மிகச் சிறந்த உதாரணம். இந்த சாத்தியமான ஒப்பந்தங்களின் கீழ், இரஷ்யா வட கொரியாவிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு மற்றும் பல வகையான வெடிமருந்துகளைப் பெறும். இதை இரஷ்ய இராணுவம் உக்ரைன் மீது பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பந்தங்களில் இரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் தொழில்துறை தளத்திற்கு உதவும் மூலப்பொருட்களை வட கொரியா வழங்குவதும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் மீது அமெரிக்கா நேரடி நடவடிக்கை எடுக்கும் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வட கொரியா நிறுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட், புதன்கிழமை நடந்த பாதுகாப்பு கவுன்சிலின்போது இரஷ்யாவும் வட கொரியாவும் ஆயுத ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளார்

`

Tags: russianorth korea
ShareTweetSendShare
Previous Post

இலங்கை vs வங்காளதேசம் யார் வெல்வார் ?

Next Post

நான்கு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

Related News

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

இல கணேசன் பாதையில் பயணித்து நமது சித்தாந்தத்தை வலிமை பெற செய்வோம் – ஹெச்.ராஜா

ரஷ்ய அதிபர் புதினுடன் ஜெய்சங்கர் சந்திப்பு – உக்ரைன் விவகாரம் குறித்து ஆலோசனை!

தவெக மாநாட்டில் பங்கேற்ற தொண்டர்கள் இருவர் உயிரிழப்பு!

அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோர் கட்சி தொடங்கியவுடன் வெற்றி பெறவில்லை – இபிஎஸ்

திமுகவை கொள்கை எதிரி – மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய் திட்டவட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகை – பாளையங்கோட்டையில் பாதுகாப்பு ஒத்திகை!

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies