ஆசிய உலகக்கோப்பை 2023-யின் இன்றைய கிரிக்கெட் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேசம் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
ஆசிய உலகக்கோப்பை 2023 இன்றைய ஆட்டம் இலங்கையில் உள்ள பல்லேகலே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் இலங்கை மற்றும் வங்காளதேச அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியானது மதியம் 3:00 மணிக்கு தொடங்குகிறது.
இலங்கை அணி இதுவரை ஆறு முறை ஆசிய கோப்பையை வென்றுள்ளது. கடந்து ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையிலும் இலங்கை அணி வெற்றி பெற்று நடப்பு சாம்பியனாக உள்ளது. ஆனால் வங்காளதேசம் அணி இதுவரை ஆசிய கோப்பையை வென்றதே இல்லை. இருப்பினும் மூன்று முறை இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்துள்ளது.
இலங்கை அணியின் வீரர்கள் அனுபவம் இல்லாத இளம் வீரர்களாக உள்ளனர். இருப்பினும் அவர்கள் அனைவரும் அணிக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் திறமை வாய்ந்த வீரர்கள். ஆனால் அவர்களால் இந்த ஆசிய கோப்பை அழுத்தத்தை சமாளிக்க முடியாது என்றும் அனுபவம் வாய்ந்த வீரர்களோடுப் போட்டியிட முடியாது என்றும் பல தரப்பு மக்கள் கூறுகின்றனர்.
மேலும் வங்காளதேச அணியில் ஷகிப் அல் ஹசனை ஆறு ஆண்டுகளுக்கு பிறகு ODI கேப்டனாக BCB அறிவித்துள்ளது. இவர் ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் 50 போட்டிகள் கேப்டனாக இருந்து வழிநடத்தி 23 போட்டிகளில் வெற்றிப் பெற்றுள்ளார். எனவே இவரின் மீது ஒரு நம்பிக்கை இருந்தாலும் இந்த அணியின் தொடக்க வீரரான தமீம் இக்பால் காயம் காரணமாக இந்தப் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார். அதனால் வங்காளதேசத்திற்கு சிறிது இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தப் போட்டியின் வெற்றி வாய்ப்பு கணக்கெடுப்பில் 63% இலங்கை வெற்றிப் பெறும் என்றும் 37% வங்காளதேசம் வெற்றிப் பெறும் என்றும் இணையத் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.