சந்திரயான்-3 உலகத்துக்கே உத்வேகம்!
Aug 22, 2025, 02:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சந்திரயான்-3 உலகத்துக்கே உத்வேகம்!

சந்திரயான்-3 மூலம் இந்தியா உலகிற்கே உத்வேகம் அளித்திருக்கிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

Web Desk by Web Desk
Aug 31, 2023, 04:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லி பல்கலைக்கழகத்தில் “ஜி20 தலைமைத்துவம் மற்றும் உலகத்தின் தாக்கம்” குறித்த நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டு பேசுகையில், “சந்திரயான்-3 தரை இறங்கிய நேரத்தில் உடலளவில் தென்னாப்பிரிக்காவில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டாலும், மனதளவில் பெங்களூருவில் இருந்தோம். இதனால் தான் சந்திரயான் தரை இறங்குவதைக் காண பிரிக்ஸ் உச்சி மாநாட்டிலிருந்து திரும்பினோம். லேண்டர் வெற்றிகரமாகத் தரை இறங்கியதும் மீண்டும் மாநாட்டில் கலந்து கொண்டோம். அப்போது சந்திரயான் தரை இறங்கியது பற்றித்தான் அரங்கமே பேசித் திகைத்தது. இதில் எனக்கு மிகப்பெரிய திருப்தி.

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பல தலைவர்கள் நம்மை முன்மாதிரியாக எடுத்துக் கொண்டனர். நாம் செய்யும் அனைத்தும் உலகிற்குத் தேவையானது என்று நான் உணர்ந்தேன். ஜி20 தலைமையை இந்தியா ஏற்றுக்கொண்டபோது, அதிகாரமளிக்கும் நிகழ்ச்சியாகக் கருதாமல், தேசிய அளவில் ஒரு கொண்டாட்டமாகவே கருதி ஏற்றுக் கொண்டோம். ஜி20-ன் தலைமைப் பொறுப்பில் 01.12.2022 முதல் 30.11.2023 வரை இந்தியா இருக்கும். மேலும்,  “ஒரே பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம்” என்பதைக் கருத்தில் கொண்டு “வசுதைவ குடும்பகம்” என்கிற மகா உபநிஷத்தின் உரையை ஜி20-க்கான கருப்பொருளாக எடுத்துக் கொண்டோம்.

நாடு முழுவதும் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், சிவில் அதிகாரிகள் மத்தியில் நடந்த ஜி20 மாநாட்டின் உச்சி மாநாடாக டெல்லி மாநாடு இருக்கும். ஜி20 குழுவில்  அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துர்க்கியே, யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என 19 நாடுகள் உள்ளன. ஜி20 உறுப்பு நாடுகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தையும், உலக வர்த்தகத்தில் 75 சதவீதத்திற்கும் மேல் மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதிப்படுத்துகிறது.

இஸ்ரோவின் சந்திரயான்-2 ஏமாற்றத்தைச் சரிப்படுத்தும் விதமாகச் சந்திரயான்-3 தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரை இறங்கியது ஒரு வரலாற்றுச் சாதனை. அமெரிக்கா, சீனா மற்றும் இரஷ்யாவுக்குப் பிறகு நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய நான்காவது நாடு என்கிற சாதனையை இந்தியா படைத்திருக்கிறது.

Tags: G20indian foreign minister
ShareTweetSendShare
Previous Post

தங்கம் கிடைக்காமல் போனது வருத்தம்தான்!-பிரக்ஞானந்தா!

Next Post

விநாயகர் சதுர்த்தி விடுமுறை: அரசாணை வெளியீடு

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies