ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் தொடங்கியது!
Mar 15, 2026, 09:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதித்யா எல்-1 விண்கலத்தின் கவுண்டவுன் தொடங்கியது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 1, 2023, 04:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் 24 மணிநேர கவுண்டவுன்  தொடங்கியுள்ளது

இஸ்ரோவின் சந்திரயான் -3யின் வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய உள்ள ஆதித்யா எல்-1 விண்கலத்தின் 24 மணிநேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது.

பூமியில் இருந்து  3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்  நிலவுக்கு 40 நாட்களில் கடந்து சென்ற சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் இறங்கி, வெற்றிகரமாக ஆய்வுப்  பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை பற்றிய ஆய்வை, இதுவரை அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி ஆகிய நாடுகளே மேற்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது இந்தியா சேர்ந்துள்ளது.

சூரியனின் வெளிப்புற வெப்பச் சூழல், கதிர் வீச்சு, காந்தப் புலம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை செய்வதற்காக ,ரூ.423 கோடி செலவில் இஸ்ரோ உருவாக்கியுள்ள, சுமார் 400 கிலோ எடை கொண்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலம் பி.எஸ்.எல்.வி. சி-57 ஏவுகணை  மூலம் நாளை பகல் 11.50 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

 

விண்ணில் பாயும் ஆதித்யா எல்-1 விண்கலம் முதலில் பூமிக்கு வெளியே புவி வட்டப்பாதையில் கொண்டுசென்று நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அதன்பிறகு, நீள்வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரும் ஆதித்யா எல்-1 விண்கலம், அதன்பிறகு சூரியன் நோக்கி நகர்த்தி செல்லப்படும்.

பூமியில் இருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘லெக்ரேஞ்சியன் புள்ளி 1’ என்பது தான் அதன் இலக்கு. அந்த இடத்தில்தான் சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான ஈர்ப்பு விசை நிலையாக இருக்கும்.

இந்த ஆதித்யா எல்-1 விண்கலம், 127 நாட்களில் 15 லட்சம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு ‘லெக்ரேஞ்சியன் 1’ புள்ளியில் நிலை நிறுத்தப்பட இருக்கிறது. அங்கு இருந்தபடிதான், சூரியன் பற்றிய ஆய்வுப்பணியை ஆதித்யா எல்-1 தொடங்க இருக்கிறது.

சூரியனில் இருந்து 14 கோடியே 85 லட்சம் கிலோ மீட்டர் தூரம் பின்தங்கி இருந்தாலும், ஆதித்யா எல்-1-ல் இருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் சூரியனை அருகில் இருந்து பார்ப்பதுபோன்ற அற்புத காட்சியை வெளிப்படுத்தும்.

விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும்.

5 ஆண்டுகள் ஆயுட்காலமுடைய  ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனைப் பற்றிப் பல புதிய கண்டுப்பிடிப்புக்களை வெளியே கொண்டுவரும் என்று உலகமே எதிர்பார்த்து இருக்கிறது.

Tags: ISROisrosunmissionaadhithya-L1
ShareTweetSendShare
Previous Post

தி.மு.க. எம்.பி. மீதான வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்!

Next Post

ஐந்து மொழிகளிலும்  ஆச்சரியப்படுத்தும் ஸ்ருதி ஹாசன்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies