பிரதமர் நரேந்திர மோடி பாரத பிரதமராக 2014 ஆம் ஆண்டு பதவியேற்றார். அன்று முதல் 9 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், பிரஃபுல் பி சர்தா என்பவர் இரண்டு கேள்விகளைத் தாக்கல் செய்தார். முதல் கேள்வி, பிரதமர் மோடி பிரதமராக இருந்து எத்தனை நாட்கள் பணிக்கு வந்தார்? என்றும் இரண்டாம் கேள்வி இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு இன்றுவரை அவர் எத்தனை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்டார்? என்றும் கேட்டார்.
இதற்கு பிரதமர் அலுவலகம் மூலம் அளிக்கப்பட்ட பதிலில், “பிரதமர் எல்லா நேரத்திலும் பணியில் இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து எந்த விடுமுறையும் எடுக்கவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
இரண்டாவது கேள்விக்கான பதிலில் பிரதமர் பங்கேற்ற நிகழ்வுகளின் எண்ணிக்கை 3,000 த்தை தாண்டி உள்ளது என்றும் கிட்டத்தட்ட ஒரு நாளுக்கு ஒரு நிகழ்வில் கலந்துகொண்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரதமரின் செயல்பாடுகள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாங்காக்கில் இந்திய சமூகத்தினருடனான உரையாடலின் , “இந்த நேரத்தில் பிரதமர் மோடியைப் போன்ற ஒருவர் கிடைத்திருப்பது நாட்டின் மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன். அவர் பிரதமர் என்பதால் இதைச் சொல்லவில்லை. நான் அவருடைய அமைச்சரவையில் உறுப்பினராக இருக்கிறேன்” என்று கூறினார்.
கடந்த ஆண்டு, மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், பிரதமர் மோடி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்குகிறார் என்று கூறியிருந்தார்.