திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகள் இரத்த தானம் செய்யத் தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
மாற்றுத்திறனாளிகள், ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள், பாலியல் தொழிலாளர்கள் இரத்த தானம் செய்வதைத் தவிர்க்கவேண்டும் என்று 2017 வழிகாட்டுதல்களை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை, விசாரித்த உச்ச நீதிமன்றம், இரத்ததானம் செய்யப்படும் இரத்தம் தூய்மையானது என்பதை உறுதியளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றம் மார்ச் 2021 யில்,இரத்த தானம் செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான 2017 வழிகாட்டுதல்களில் மூன்று வகை நபர்களை இரத்த தானம் செய்வதிலிருந்து விலக்கி இரத்த தானம் செய்பவர்களைப் பரிந்துரைப்பதை எதிர்த்த ஒரு தனி மனுவை குறித்து அனைவரிடமும் பதில்களைக் கோரியது.
புதன்கிழமையன்று இந்த மனு மீதான விசாரணையின் போது, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மனுதாரரின் வழக்கறிஞர், சில வகை மக்கள் இரத்த தானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்பது அவர்களை மோசமாகப் பாதித்ததாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதை குறித்து “இரத்தம் பெறுபவருக்கு மாற்றப்படும் இரத்தம் சுத்தமான இரத்தம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும், எச்.ஐ.வி, ஹெபடைடிஸ் பி அல்லது சி நோய்த்தொற்றுக்கான ஆபத்தில் கருதப்படும் நபராக இரத்தம் அளிப்பவர் இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் குறிப்பிடுகிறது.
இதனால் திருநங்கைகள், ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பாலியல் தொழிலாளிகள் இரத்த தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.