இந்து மதத்தை அழிப்பேன், ஒழிப்பேன் என்று வெறுப்புப் பேச்சு பேசிய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்குப் பாஜக, இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செய்தி தொடர்பாளர் இளங்கோவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, பேசிய அவர், பெரும்பாலான இந்துக்கள் ஓட்டுப்போட்டுத்தான் உதயநிதி திருவல்லிக்கேணியில் எம்.எல்.ஏ. ஆனார். அமைச்சரும் ஆனார். அப்படி இருக்கையில், இந்துக்கள் போட்ட வாக்கு எனக்கு வேண்டாம் என சொல்லி, உதயநிதி தனது பதவியை ராஜினாமா செய்ய தயாரா என கேள்வி எழுப்பினார் இங்கோவன்.
தொடர்ந்து பேசிய அவர், அமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்கு தொண்டு செய்ய வேண்டியவர், வன்முறையை கட்டவிழ்த்துள்ளார். உதயநிதியை இன்று பாரதமே வெறுக்கிறது. மானமுள்ளத் திமுகவினர் வெட்கி தலை குனிகின்றனர் என்று வெளுத்து வாங்கினார்.