பிரதமர் மோடி இன்று அமெரிக்க அதிபர் உள்ளிட்ட ஜப்பான், இங்கிலாந்து, ஜெர்மனி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த ஜி20 உச்சி மாநாடு டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபம் சர்வதேச கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ளது. இது G20 உச்சிமாநாட்டின் பதினெட்டாவது கூட்டமாகும். இந்தியா மற்றும் தெற்காசியாவில் நடைபெறும் முதல் ஜி20 மாநாடாகும்.
இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்தியா வந்த வண்ணம் உள்ளனர். இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது. தலைவர்கள் தங்கும் ஓட்டல்கள், தெருக்கள், சாலைகள் ஜொலிக்கின்றன.
ஜி20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். ஜி20 மாநாட்டிற்கிடையே இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தையிலும் பிரதமர் மோடி ஈடவுள்ளார்.
மொரீஷியஸ் பிரதமர், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் பிரதமர் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
மொரீஷியஸ் பிரவிந்த் குமார் ஜுக்நாத், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோருடன் புதுதில்லியில் உள்ள தமது இல்லத்தில் இன்று மாலை இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இருநாடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆய்வு செய்வதற்கும், வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த சந்திப்புகள் வாய்ப்பளிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.