மொரோக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தக் கடினமான நேரத்தில் இயன்ற அனைத்து உதவிகளையும் மொரோக்கோவுக்கு செய்ய இந்தியா தயாராக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில், ரிக்டர் பதிவில் 6.8 தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 296 பேர் உயிரிழந்ததாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
Extremely pained by the loss of lives due to an earthquake in Morocco. In this tragic hour, my thoughts are with the people of Morocco. Condolences to those who have lost their loved ones. May the injured recover at the earliest. India is ready to offer all possible assistance to…
— Narendra Modi (@narendramodi) September 9, 2023
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பதிவில்,
மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிர் இழந்ததை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். இந்த துயரமான நேரத்தில், மொரோக்கோ மக்களுக்கு எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சோகமான நேரத்தில், என்னுடைய நினைவெல்லாம் மொரோக்கோ மக்களுடன் இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்தக் கடினமான நேரத்தில் இயன்ற அனைத்து உதவிகளையும் மொரோக்கோவுக்கு செய்ய இந்தியா தயாராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.