மத்திய அரசு ஒவ்வொரு மாதமும், மாநிலங்களுக்குத் தேவையான கோதுமை ஒதுக்கீடு செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது 8,500 டன் கோதுமை தமிழக அரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழக நியாயவிலைக் கடைகளில், 96 லட்சம் முன்னுரிமை மற்றும் 18.64 லட்சம் அந்தியோதயா அட்டைதாரர்களுக்கு, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கேற்ப, ஒவ்வொரு அட்டைதாரருக்கும் தலா 3 கிலோ கோதுமை வழங்கப்படுகிறது. கடந்த மாதம், தமிழகத்திற்கான கோதுமை ஒதுக்கீடு 1,038 டன் கிடைத்தது. ஆனால், அனைத்து அட்டைதாரர்களுக்கும் கோதுமை வழங்கத் தமிழக அரசு மறுத்துவிட்டது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு வழக்கம் போல 8,500 டன் கோதுமை தேவைப்படுகிறது எனத் தமிழக உணவுத் துறை சார்பில், மத்திய அரசுக்குக் கடிதம் எழுதப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, தமிழகத்திற்கு ஏற்கெனவே வழங்கியது போல மாதம் 8,500 டன் கோதுமை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. ஒவ்வொரு மாநில நலன் மற்றும் மக்களின் ஆரோக்கியத்தில் பாரதப் பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். அதன் வெளிப்பாடாக, மத்திய அரசு துரித நடவடிக்கை மேற்கொண்டு மக்கள் பணியில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.