ஜி20 அமைப்பை ஜி21-ஆக மாற்றிய பெருமை மோடிக்கு மட்டுமே உண்டு: அண்ணாமலை பெருமிதம்!
Sep 6, 2025, 11:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜி20 அமைப்பை ஜி21-ஆக மாற்றிய பெருமை மோடிக்கு மட்டுமே உண்டு: அண்ணாமலை பெருமிதம்!

Web Desk by Web Desk
Sep 10, 2023, 03:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல ஆண்டுகளாக ஜி20 என்று இருந்த அமைப்பை, தற்போது நமது பிரதமர் நரேந்திர மோடி ஜி21 ஆக மாற்றி இருக்கிறார். குறிப்பாக, அதிக மக்கள்தொகை கொண்ட ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்பிற்குள் நிரந்தர உறுப்பினராகக் கொண்டு வந்து ஜி21 ஆக மாற்றிய பெருமை நமது பிரதமரையே சாரும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் தமிழக மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “டெல்லியில் இந்தியா தலைமையில் நடக்கக் கூடிய ஜி20 மாநாடு மிகப்பெரிய சரித்திரம் படைத்துள்ளது. குறிப்பாக, பிரதமர் மோடி உலக அளவில் முன்னிறுத்தக் கூடிய குறிக்கோள்கள் உலக மக்களுக்குத் தெரியும். நிறைய பிரச்சனைகள் இருக்கக்கூடிய உலகமாக இருக்கிறது.

பொருளாதார பிரச்சனைகள், நாடுகளுக்குள் இருக்கக்கூடிய யுத்தங்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் ஜி20 அரங்கில் நமது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ஜி20 இருந்தது. ஆனால், அதை ஜி21 ஆக பிரதமர் நரேந்திர மோடி மாற்றியுள்ளார். குறிப்பாக, அதிக மக்கள்தொகை கொண்ட ஆப்பிரிக்க யூனியனை ஜி20 அமைப்புக்குள் நிரந்தர உறுப்பினராகக் கொண்டு வந்து சாதனை படைத்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி முன்னிறுத்தக் கூடிய விஷயங்களை, உலக அளவில் கொண்டு சென்றுள்ளார். ஜி20 மாநாட்டில் சிறுதானியங்களின் முக்கியத்துவம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். வாழ்க்கையின் மாற்றம், பழக்க வழக்கம், யோகா கலை, சாப்பிடும் முறை ஆகியவற்றில் பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியும் எனப் பிரதமர் கூறியுள்ளார். உலக அரங்கில் இந்தியா தலைமையில் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு நாடாக நமது பிரதமர் மோடி ஏற்படுத்தி இருக்கிறார்.

பிரதமர் மோடியின் திட்டங்களை, அமெரிக்க அதிபர், இங்கிலாந்து அதிபர் போன்ற முக்கியமான தலைவர்களுடன் பாராட்டியுள்ளனர். சீனா உலகின் தென்பகுதியில் தலையில் சிறந்த நாடாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அருகில் உள்ள சிறிய நாடுகளுக்கு கடன் கொடுத்து அவற்றை தன் நாட்டிற்குக் கீழ் கொண்டு வரும் நிலையை ஏற்படுத்தியது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை வளரும் சிறிய நாடுகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. இது தென் பிராந்தியத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒட்டுமொத்தமாக ஓராண்டு காலமாக இந்தியாவின் ஜி20 தலைமை மக்களை முன்னிறுத்தி நடந்து வருகிறது. குறிப்பாக, நமது அரசு 220 கூட்டங்கள் நடத்தியுள்ளது. 64 மாநகரத்தில் நடைபெற்றுள்ளது. காஞ்சிபுரம், மகாபலிபுரம், சென்னை போன்ற எல்லா நகரங்களிலும் ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது. மற்ற நாடுகளில் ஜி20 நடக்கும்போது, நாட்டின் தலைநகரில் மட்டுமே நடைபெறும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று உள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு அதிகாரிகள் இந்தியா வந்துள்ளனர்.

நமது நாடு தலைமை ஏற்ற பிறகு, ஜி20 மிகப் பெரிய அளவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஜி20 மாநாடு நடக்கும் பாரத் மண்டபத்தில் தமிழகத்தில் செய்த நடராஜர் சிலையை நிறுவி நமது கலாச்சாரத்தைப் பிரபத்தி பலிக்கும் வகையில் பிரதமர் செயல்படுத்தியுள்ளார். இது தமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமை. அதுவும் குறிப்பாக சுவாமி மலையில் பல ஆண்டுகளாகச் சிலை வடிக்கும் குடும்பத்தின் மூலம் இந்த சிலை செய்யப்பட்டுள்ளது. உலக அரங்கில் இந்தியாதான் மையப் புள்ளி என்பதை முன்னிறுத்தி உள்ளோம். சீனாவிற்கு மாற்றாக இந்தியா வளர்ச்சி அடைகின்ற நாடாகவும், வளராத நாடுகளுக்கு முன் உதாரணமாகவும் இருக்கும்” என்றார்.

Tags: PM Modiannamalaichennai airportinterview
ShareTweetSendShare
Previous Post

ஆசியக் கோப்பை கிரிக்கெட் : வங்கதேசம் தோல்வி!

Next Post

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Related News

இந்தியா – அமெரிக்கா உறவுகள் குறித்த டிரம்பின் உணர்வுகளை பாராட்டுகிறேன் – பிரதமர் மோடி

கோவை தொண்டாமுத்தூரில் உலா வரும் காட்டு யானைகள் விரட்டும் பணி தீவிரம் – கும்கி யானைகள் வரவழைப்பு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக உயர்வு!

இன்றைய தங்கம் விலை!

கோவை வன சரக எல்லைப் பகுதிகளில் கம்பி வேலி அமைக்கும் திட்டம் – நீதிபதிகள் ஆய்வு!

கடலூரில் ரசாயன தொழிற்சாலையில் வாயு கசிவு – பாதிக்கப்பட்ட ஒரு சிலரை மட்டுமே அமைச்சர் சந்தித்ததாக குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

நெல்லையில் இளைஞர் வெட்டிக்கொலை – இருவர் கைது!

எப்போதும் பிரதமர் மோடியின் நண்பனாக இருப்பேன் – டிரம்ப் அறிவிப்பு!

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 நக்சலைட்டுகள் பலி!

ஆடுதுறையில் பெட்ரோல் குண்டுகளை வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற சம்பவம் – இருவர் கைது!

தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன் விரகுல் தேர்வு!

விநாயகர் சதுர்த்தி விழா – வடமாநிலங்களில் இன்று சிலைகள் கரைப்பு!

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழக அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் : 5-வது இடத்தில் உதயநிதி ஸ்டாலின்!

திருப்பதி அருகே விண்வெளி நகரம் – ஆந்திர முதலவர் சந்திரபாபு நாயுடு தகவல்!

அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதியாளர்களுக்காக நிவாரண தொகுப்பு – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies