ஆதித்யா-எல் 1 விண்கலத்தின் சுற்றுப் பாதை 3-வது முறை வெற்றிகரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) உருவாக்கிய ஆதித்யா-எல் 1 எனும் விண்கலம், சூரியனையை ஆராய்வதற்காக கடந்த செப்டம்பர் 2-ம் தேதி ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ ஹரிகோட்டா சதிஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பிஎஸ்எல்வி-சி57 ஏவுகணை மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஆதித்யா-எல் 1 குறைந்தபட்சம் 235 கி.மீ. அதிகபட்சம் 19,500 கி.மீ. தூரம் கொண்ட புவி நீள்வட்ட சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்தின் சுற்றுப் பாதை தூரத்தை அதிகரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Aditya-L1 Mission:
The third Earth-bound maneuvre (EBN#3) is performed successfully from ISTRAC, Bengaluru.ISRO's ground stations at Mauritius, Bengaluru, SDSC-SHAR and Port Blair tracked the satellite during this operation.
The new orbit attained is 296 km x 71767 km.… pic.twitter.com/r9a8xwQ4My
— ISRO (@isro) September 9, 2023
அந்த வகையில், ஆதித்யா விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் தற்போது 3-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஆதித்யா விண்கலம் பூமிக்கு அருகே வரும்போது, அதில் உள்ள இயந்திரங்கள் இயக்கப்பட்டு சுற்றுப் பாதை உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை ஏற்கெனவே 2 முறை மாற்றப்பட்டது. தொடர்ந்து 3-வது முறையாக கடந்த 9-ம் தேதி நள்ளிரவு விண்கலத்தின் சுற்றுப் பாதை உயரம் அதிகரிக்கப்பட்டது.
மொரீஷியஸ், பெங்களூரு, SDSC-SHAR மற்றும் போர்ட் பிளேரில் உள்ள இஸ்ரோவின் தரை நிலையங்கள் இந்த நடவடிக்கையின் போது செயற்கைக்கோளைக் கண்காணித்தன.
இதன்மூலம், குறைந்தபட்சம் 296 கி.மீ. அதிகபட்சம் 71,767 கி.மீ. தூரம் கொண்ட சுற்றுப் பாதைக்கு விண்கலம் கொண்டு செல்லப்பட்டது. இதுபோல இன்னும் 2 முறை சுற்றுப் பாதை உயரம் அதிகரிக்கப்படும். பின்னர், ஆதித்யாவின் அடுத்த சூழ்ச்சி செப்டம்பர் 15-ம் தேதி மதியம் 02:00 மணி அளவில் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்பிறகு, புவிவட்டப் பாதையில் இருந்து விலகி, சூரியனை நோக்கி விண்கலம் பயணிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆதித்யா விண்கலம், சுமார் 4 மாத பயணத்துக்கு பிறகு, பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தூரத்தில் உள்ள எல்-1 பகுதி அருகே நிலைநிறுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.