பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!
Sep 12, 2026, 01:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பலியாகும் புலிகள் – நீலகிரியில் தொடரும் சோகம்!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 11, 2023, 03:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில மாதங்களில் மட்டும் 6 புலிகள் மர்மமான முறையில் இறந்துள்ளது. எனவே, புலிகள் பலியாவதைத் தடுக்க தமிழக அரசு உடனே முன்வரவேண்டும் என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊட்டி தெற்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட எமரால்டு நேருநகர் பாலம் அருகே அவலாஞ்சி அணை உபரி நீர் வாய்க்கால் அருகே 2 புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இது தொடர்பாக எம்ரால்டு வனப்பணியாளர்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து, நீலகிரி ஊட்டி வன கோட்ட மாவட்ட வன அலுவலர் கவுதம் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். அப்போது அங்கு ஒரு புலி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி நீரோடைக்கரையில் சடலமாகக் கிடந்தது. அவற்றை வனத்துறையினர் மீட்டு ஆய்வு செய்தபோது, அதில் ஒரு புலி பெண் புலி என்பதும், அதன் உடம்பில் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிய வந்தது. இதனால், அவை ஒன்றுக்கொன்று சண்டையிட்டுப் பலியாகவில்லை எனத் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து, 3 வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் 2 கால்நடை மருத்துவர்கள், இறந்துபோன புலியின் உடலை பிரதே பரிசோத நடத்த உள்ளனர்.

புலிகளின் உடல் உள்ளுறுப்புகளில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு அவை நச்சுயியல் ஆய்வுக்கு அனுப்பப்படும். அதன் ஆய்வு முடிவில் புலிகள் இறப்புக்கு என்ன காரணம் எனத் தெரிய வரும்.

இது தொடர்பாகப் பேசிய வன ஆர்வலர் ஒருவர், நீலகிரி வனப் பகுதியில் புலிகள் சாவு தொடர் கதையாக உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிறியூர் வனப்பகுதியில் பிறந்து 2 வாரங்களே ஆன 2 புலிக்குட்டிகள் இறந்து கிடந்தன. மற்றொரு இடத்தில் மேலும் ஒரு புலி இறந்து கிடந்தது.

நடுவட்டம் தேயிலைத் தோட்டத்தில் 7 வயதான புலி இறந்து கிடந்தது. தற்போது, அவலாஞ்சி வனப் பகுதியில் மேலும் 2 புலிகளின் செத்துக்கிடக்கின்றன. இப்படி, நீலகிரி மாவட்டத்தில் ஒரே மாதத்தில் மட்டும் 6 புலிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே, புலிகளை யாராவது வேட்டையாட இது போன்ற காரியங்களில் இறங்கினார்களா? எனத் தெரியவில்லை. ஆனால், புலிகள் இறப்பில் மர்மம் உள்ளது போல் தெரிகிறது. இதற்கு அரசு தான் தீர்வு காண வேண்டும் என வேதனையை வெளிப்படுத்தினார்.

Tags: tiger
Share
Tweet
SendShare
Previous Post

ஆதித்யா-எல் 1 சுற்றுப்பாதை வெற்றிகரமாக 3-வது முறை மாற்றம்: இஸ்ரோ !

Next Post

சந்திரபாபு நாயுடு கைது: தெலுங்கு தேசம் கட்சியினர் மறியல்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies