இந்திய நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது!
Mar 15, 2026, 05:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது!

முகமது பின் சல்மானிடம் பிரதமர் மோடி உறுதி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 11, 2023, 08:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவுக்கான நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது. இரு நாட்டு உறவு சர்வதேச வளர்ச்சிக்கு உதவும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, சவூதி இளவரசன் முகமது பின் சல்மானிடம் கூறினார்.

இந்தியா தலைமையிலான ஜி20 உச்சி மாநாடு, டெல்லியில் கடந்த 2 நாட்கள் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சவூதி அரேபியா நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் இந்தியா வந்திருந்தார். மற்ற நாடுகளின் தலைவர்கள் மாநாடு முடிந்ததும் நேற்றே கிளம்பி விட்ட நிலையில், சவூதி இள்வரசர் சல்மான் மட்டும் டெல்லியில் தங்கி இருந்தார்.

இந்த சூழலில், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில், சவூதி இளவரசர் முகமது பின் சல்மான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின்போது, அரசியல், வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களும் விவாதிக்கப்பட்டது. மேலும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். முன்னதாக குடியரசுத் தலைவர் மாளிகையில் முகமது பின் சல்மானிற்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையையும் சல்மான் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் பேசுகையில், “ஜி20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தது பாராட்டத்தக்கது. மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளது. இதை சவூதி அரேபியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாடுகளும்தான் சொல்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை அனைத்து நாடுகளுக்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியா – சவூதி அரேபியா ஆகிய 2 நாடுகளும் வளமான எதிர்காலத்தை பெறுவதற்கு ஒன்றிணைந்து வேலை செய்வோம்” என்றார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி கூறுகையில், “இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே வரலாற்று சிறப்புமிக்க பொருளாதார வழித்தடத்தை துவங்க முடிவு செய்துள்ளோம். இந்த வழித்தடமானது இரு நாடுகளை இணைப்பது மட்டுமின்றி, ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் இணைப்பை வழங்கவும் உதவும்.

உங்கள் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வை 2030-ன் கீழ், சவூதி அரேபியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது. இந்தியாவுக்கான நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது. இரு நாட்டு உறவு சர்வதேச வளர்ச்சிக்கு உதவும். ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Tags: talksPM Modisaudi arabiacrowm princemohammed bin salmanbilateral
ShareTweetSendShare
Previous Post

கைவினைக் கலைஞர்களுக்கு பிரதமர் மோடி 17-ம் தேதி புதிய திட்டம்!

Next Post

சாலையில் அமர்ந்து அண்ணாமலை தர்ணா போராட்டம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies