கைவினைக் கலைஞர்களுக்கு பிரதமர் மோடி 17-ம் தேதி புதிய திட்டம்!
Sep 12, 2026, 11:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கைவினைக் கலைஞர்களுக்கு பிரதமர் மோடி 17-ம் தேதி புதிய திட்டம்!

'பி.எம். விஸ்வகர்மா' என்ற பெயரில் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு நிதி உதவி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 11, 2023, 07:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

“பி.எம். விஸ்வகர்மா” என்கிற பெயரில் கைவினைக் கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, வரும் 17-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் 2023-2024 முதல் 2027-2028 வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாட்டின் 77-வது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்றி வைத்து பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, ‘பி.எம். விஸ்வகர்மா’ என்ற பெயரில் பாரம்பரிய தொழில் கலைஞர்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து, இத்திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, பொருளாதார விவரங்களுக்கான கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு ‘பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்’ மற்றும் அடையாள அட்டை கிடைக்கும்.

இத்திட்டம் 2023-2024 முதல் 2027-2028 வரை 5 ஆண்டுகள் அமலில் இருக்கும். இத்திட்டத்தின் முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். 2-வது தவணையாக 2 லட்சம் வரை 5 சதவீத வட்டியுடன் கடன் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 5 லட்சம் குடும்பங்களும், மொத்தமாக 5 ஆண்டுகளில் 30 லட்சம் குடும்பங்களும் பயன்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் தரம், அளவு ஆகியவை உள்நாட்டு மற்றும் உலகளாவிய மதிப்பு சங்கிலியுடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 17-ம் தேதி ‘விஸ்வகர்மா தினத்தில்’ தொடங்கி வைக்கிறார். அன்றையதினம் நாடு முழுவதும் 70 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இத்திட்டத்தில் யார் யார் பயனடைய முடியும்? கொத்தனார், தச்சர், பொற்கொல்லர், கூடை, பாய், துடைப்பம் தயாரிப்பவர், குயவர், சிற்பிகள், கல் தச்சர்கள், கயிறு செய்பவர், பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர், முடி திருத்தும் தொழிலாளர், தையல்காரர், மீன்பிடி வலை தயாரிப்பவர், படகு தயாரிப்பவர், கவசம் தயாரிப்பவர், பூமாலைகள் கட்டுபவர், சலவைத் தொழிலாளர், இரும்புக் கொல்லர், சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள், பூட்டுகள் செய்பவர்கள், காலணி தைப்பவர், காலணி தொழிலாளா், காலணி செய்பவர், உள்ளிட்ட 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் நிதி பெற தகுதி உடையவர்களாவர்.

Tags: PM ModiPM Viswakarma schemeLaunchesseptember 17
Share
Tweet
SendShare
Previous Post

ரோட்டில் கிடந்த நுாறு நாள் வேலை திட்ட ஆவணங்கள் !

Next Post

இந்திய நட்பு நாடுகளில் சவூதி அரேபியா முக்கியமானது!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies