சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.
Mar 15, 2026, 07:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சனாதன தர்மம்: அற்புத விளக்கம் தந்த ஆளுநர்.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 12, 2023, 02:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம் என, சனாதன தர்மம் குறித்து மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் சனாதனம் குறித்து, தமிழக முதல்வர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தவறாக பிரச்சாரம் செய்து வருவதாக ஆன்மீக அன்புர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும், சனாதன தர்மம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், சனாதன தர்மம் என்றால் என்ன? என்பது குறித்து மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், சனாதன தர்மம் என்பது ஆன்மிகம், வாழ்க்கை மற்றும் படைப்பு என அனைத்தையும் உள்ளடக்கியது.

இதில், படைப்பின் ஒவ்வொரு கூறுகளுமே, ஆன்மிகத்தின் பல்வேறு வெளிப்பாடுகளான். இவை ஒன்றோடொன்று தொடர்புடையது, இணைக்கப்பட்டதாகும்.

இது, ஒவ்வொரு தனிமனிதன், குடும்பம், சமூகம் என தங்களுக்குள்ளும், சுற்றுச்சூழலுக்கும் இடையே பரஸ்பர உறவைப் பிரதிபலிக்கிறது. இது தனிப்பட்ட மற்றும் கூட்டு கலாச்சாரத்தின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.

சனாதன தர்மத்தில் சாதி அல்லது சமூக பாகுபாடுகளுக்கு ஒருபோதும் இடமில்லை. அத்தகைய பாகுபாடுகள் சமூகத் தீமைகள் மட்டுமின்றி, சனாதன தர்மத்துக்கும் எதிரானது.

சனாதன தர்மத்தின் முதல் ஆவணம் ரிக் வேதமே. அதில், பரமேஷ்வரர் அல்லது ஆதி பகவான் அல்லது சர்வ சக்தி உள்ள கடவுள்தான் படைப்புகளை உருவாக்கினார்.

ஒவ்வொரு படைப்புகளிலும் அங்கமாகக் கடவுள் இருக்கிறார். மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என உயிருள்ள மற்றும் உயிரற்றவற்றிலும் அவர் இருக்கிறார். இதனால், படைப்பு முழுவதும் ஒரு குடும்பமே.

இது உலகளாவிய ஒருமைப்பாடு, ஆன்மிக முயற்சி, மக்களின் அனுபவங்கள், அவை சூழலுக்கு ஏற்ப அனுபவிக்கப்படுகிறது.

எனவே, ஒவ்வொருவரும் அதை தங்கள் வழிகளில் வெளிப்படுத்தியும், சம்பிரதாயங்களையும், பாதைகளையும் உருவாக்குகிறார்கள். ஆனால், அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை.

சமய நம்பிக்கையற்ற என்ற கருத்து சனாதன தர்மத்துக்கு அன்னியமானது. அதற்கு ஒருபோதும் சனாதன தர்மத்தில் இடம் இல்லை.

உலகம் ஒரு குடும்பம் அல்லது யாதும் ஊரே, யாவரும் கேளிர் ஆகியவை சனாதனத்தின் முக்கியமானவைகள் ஆகும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் அழகான வெளிப்பாடுதான் சனாதன தர்மம் எனத் தெரிவித்துள்ளார்.

ஆளுநரின் கருத்துக்கு, ஆன்மிக அன்பர்களும், மடாதிபதிகளும், சமயத் தலைவர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Tags: RN Ravisanatan dharmagoverner of tamilnadu
ShareTweetSendShare
Previous Post

 ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் குளறுபடி !

Next Post

சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க: சோனியா & ராகுலே காரணம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies