கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பினராய் விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கேரளாவில், மாநிலம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு கொண்ட 726 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமீறல், போக்குவரத்திற்கு இடையூறாக வாகனம் நிறுத்துதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது மற்றும் போக்குவரத்து விதிமீறுபவர்களில் ஈடுபடுவோர் இந்த கேமராக்கள் மூலம் கண்டறிந்து, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்தது.
இதற்காக மாநிலம் முழுவதும் 726 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 675 விபத்து ஏற்படுத்திய வாகனங்கள், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் பிடிக்கவும் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஏ.ஐ கேமரா செயல்பாட்டுக்கு வந்த முதல்நாளிலேயே மாநிலம் முழுவதிலும் சேர்த்து 25 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் குற்றங்கள் குறையும் எனக் கேரள அரசு தம்பட்டம் அடித்து வரும் நிலையில், இந்த கேமராக்கள் நிறுவியதில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டம் சாட்டி, அமளியில் ஈடுபட்டனர்.
சிசிடிவி கேமராக்கள் அமைக்க போதிய முன்னனுபவம் இல்லாத கெல்ட்ரான் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்தது எப்படி என்றும், சந்தை விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது என்றும், இதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று உள்ளது என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முன்னணி கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.