இந்தி மொழி தினத்தையொட்டி, தேசிய ஒற்றுமையை ஹிந்தி வலுப்படுத்தும்- பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இந்தி மொழி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தி மொழி தினத்தையொட்டி எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில், எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஹிந்தி மொழி தின வாழ்த்துகள். தேசிய ஒற்றுமையை ஹிந்தி மொழி தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன், என்று கூறியுள்ளார்.
मेरे सभी परिवारजनों को हिन्दी दिवस की हार्दिक शुभकामनाएं। मेरी कामना है कि हिन्दी भाषा राष्ट्रीय एकता और सद्भावना की डोर को निरंतर मजबूत करती रहेगी।
— Narendra Modi (@narendramodi) September 14, 2023
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் காணொலி ஒன்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டுள்ள அவர்,
हिंदी दिवस के अवसर पर मेरा संदेश… https://t.co/SVhPFu0Kra
— Amit Shah (@AmitShah) September 14, 2023
“‘இந்தி திவஸ்’ நாளில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஐ.நா சபையில் ஹிந்தி பயன்பாட்டை இந்தியா ஊக்குவித்தது. உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொழிகளின் பன்முகத்தன்மையை ஹிந்தி ஒருங்கிணைக்கிறது. சுதந்திரப் போராட்டத்திலிருந்து இன்று வரை, ஹிந்தி முக்கியப் பங்காற்றுகிறது. ஹிந்தி மொழி நமது கலாசார பாரம்பரியம்.
நமது இந்திய மொழிகள் மற்றும் பேச்சுவழக்குகள் அனைத்தும் நமது கலாசார பாரம்பரியம், அதை நாம் ஒன்றாக கொண்டு செல்ல வேண்டும். ஹிந்தி எந்த இந்திய மொழியுடனும் போட்டியிட்டதில்லை. ஒருபோதும் போட்டியிட முடியாது. அனைத்து மொழிகளையும் வலுப்படுத்துவதன் மூலம் வலுவான தேசத்தை உருவாக்க முடியும். அனைத்து உள்ளூர் மொழிகளையும் வலுப்படுத்த ஹிந்தி பங்களிக்கும் என்று நான் நம்புகிறேன்
சுதந்திரத்திற்காக போராடிய போது, ஹிந்தியின் முக்கிய பங்கைக் கண்டு, சுதந்திரத்திற்குப் பிறகு ஹிந்தியை அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றினர். நாடு முழுவதும் செப்டம்பர் 14ம் தேதி ஹிந்தி அதிகாரப்பூர்வ மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளாக கொண்டாடப்படுகிறது. இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளைக் கொண்ட நாடாக உள்ளது. அகில இந்திய இந்தி மாநாடு இந்த ஆண்டு புனே நகரில் நடைபெறும்” என்று தெரிவித்தார்.