பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு மற்றும் பாஜக சார்பில் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்களும், பாஜகவினரும் பிரதமரின் பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு காணொலி மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வாய்ப்பை நமோ ஆப் வழங்கியுள்ளது. இந்த செயலி மூலம் யார் வேண்டுமானாலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க முடியும்.
வீடியோவைப் பதிவு செய்து, NaMo செயலியில் பதிவேற்றி, நேரடியாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்ப வழி வகை செய்கிறது.
நீங்களும் பிரதமருக்கு வாழ்த்து சொல்லனுமா ?
நீங்கள் முதலில் செய்யவேண்டியது உங்க மொபைல் ல NaMo ஆப்ப டவுன்லோட் செய்யனும்
அதன்பிறகு செயலியில் உள்ள ஹோம் பேஜில் (home page )சேவா பக்வாடா campaignநில் சென்று ‘வீடியோ ஷுபக்கம்னா’ என்ற option ன கிளிக் செய்யுங்க .
உங்க வாழ்த்து வீடியோ பதிவு நேரடி வாழ்த்து பதிவுகளாகவோ அல்லது முன்பே பதிவு செய்து வைத்த வீடியோவாக இருந்தாலும் ‘வீடியோ ஷுபக்கம்னா’ வில் கிளிக் செய்த பிறகு upload வீடியோ பட்டன கிளிக் செய்து உங்க வீடியோவை upload பண்ணுங்க , வீடியோ upload ஆகிய பின் நெஸ்ட் -ர பட்டன கிளிக் செய்யுங்க .
கொடுக்கப்பட்டுள்ள வீடியோ கிரீட்டிங் catagory ல போஸ்ட் வீடியோ optiona கிளிக் செய்து உங்க பிறந்தநாள் வாழ்த்து பதிவை பகிர்ந்து பிரதமருக்கு நீங்களும் வாழ்த்து சொல்லுங்க.
வீடியோ வாழ்த்து பதிவை ‘video wall ‘ டேப்பில் கிளிக் செய்து யாரெல்லாம் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்கள் என்று பார்க்க முடியும்.
மேலும் சூரத்தில், பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி, ஆட்டோ ஓட்டுநர்கள், ஒரு நாள் முழுவதும் இலவசமாக வாடிக்கையாளர்களுக்குச் சேவை வழங்க முடிவு செய்துள்ளனர்.
இதேபோல், மணல் சிற்பம் அமைத்தும், ஓவியம் வரைந்தும், சமூக வலைத்தளங்களில் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.