திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் பிஏ வீட்டில் ஐ.டி ரெய்டு ஏன்? என்று அறப்போர் இயக்கம் விளக்கம் கொடுத்துள்ளது.
இது தொடர்பாக, அறப்போர் இயக்கத்தின் எக்ஸ் பதிவில், டெண்டர் கொடுப்பதே ஒப்பந்ததாரர்கள் போட்டிப் போட்டு விலை கொடுத்து அதன் மூலம் அரசுக்குக் குறைந்த விலையில் தரமான பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காகத் தான்.
டெண்டர் கொடுப்பதே ஒப்பந்ததாரர்கள் போட்டி போட்டு விலை கொடுத்து அதன் மூலம் அரசுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்கள் வாங்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் அந்த ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கூட்டுசதி செய்து ஒரே விலைக்கு டெண்டர் கொடுக்க வைத்து, சந்தை விலையை விட அதிக விலையை நிர்ணயம்… pic.twitter.com/A0GjJO3RfS
— Arappor Iyakkam (@Arappor) September 20, 2023
ஆனால் அந்த ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து கூட்டுச்சதி செய்து ஒரே விலைக்கு ஒப்பந்தப்புள்ளி கொடுக்க வைத்து, சந்தை விலையை விட அதிக விலையை நிர்ணயம் செய்து அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்து, தமிழக மின்சார வாரியத்திற்கு Transformer வாங்கி கொடுத்ததில் 400 கோடி இழப்பு ஏற்படுத்திய மின்துறை ஊழியர் காசி வீட்டில் தான் இன்று ரெய்டு நடக்கிறது.
இந்த ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்வதற்காகவே இவர் அன்றைய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களால் இந்த பதவியில் அமர்த்தப்பட்டார் என்பதும் இந்த ஒப்பந்தப்புள்ளி குறித்த வேலைகளை எல்லாம் அவர் செந்தில் பாலாஜி வீட்டிலிருந்து தான் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.