இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவற்கு முன்பாக, நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது .
இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகம்,
உள்நாட்டு போரில் கடுமையாக சேதம் அடைந்த நிலையில் இந்த துறைமுகத்தை ,சீரமைக்க, மத்திய அரசு, 300 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளது.
இலங்கையில் இருந்து தமிழகத்தின் நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு கப்பல்
போக்குவரத்து துவங்க இந்தியா – இலங்கை இடையே ஒப்பந்தம்
கையெழுத்தாகியுள்ளது.
கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவற்குவசதியாக, சுங்கத்துறை,
வெளியுறவுத்துறை, குடிமைத்துறை, இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம்
உள்ளிட்டவை வாயிலாக பல்வேறு பணிகள் செய்யப்பட்டுவருகின்றன.
இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம், 150 பயணிகள் பயணம் செய்யக்கூடிய அதிவேக பயணிகள் படகு ஒன்றை இந்தச் சேவைக்காக வழங்கியுள்ளதாகவும், அக்டோபர் மாதம் முதல் வாரத்தில், இந்தியா இலங்கை இடையேயான அதன் முதல் பயணத்தைத் தொடங்கவிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து , நாகப்பட்டினம் துறைமுகத்தை அழகுபடுத்தும் பணி ஓரிரு
நாளில் தொடங்க உள்ளது.