பிரதமர் நரேந்திர மோடி வாரணாசிக்கு வருவதை முன்னிட்டு மக்கள் தங்கள் வீடுகளை மின் விளக்குகளால் அலங்கரித்ததுள்ளனர்.
வாரணாசி, ராஜதலாப், கஞ்சரியில் கட்டப்படவுள்ள நவீன சர்வதேச கிரிக்கெட் மைதானம், சுமார் 450 கோடி ரூபாய் செலவில் 30 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் உருவாக்கப்படவுள்ளது. இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை வரவேற்க வாரணாசியே விழாக்கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக பொது மக்கள் தங்கள் வீடுகளை மின் விளக்குகளால் அலங்கரித்து பிரதமர் மோடியை வரவேற்றனர். பிரதமர் மோடி செல்லும் இடமெல்லாம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசம் முழுவதும் சுமார் ரூ. 1115 கோடி செலவில் கட்டப்பட்ட 16 அடல் உண்டு உறைவிட வித்யாலயா பள்ளிகளைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.