9 வந்தே பாரத் விரைவு இரயில்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

9 வந்தே பாரத் விரைவு இரயில்களைப் பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்!

நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களின் இணைப்பை இது உறுதிசெய்கிறது.

Murugesan M by Murugesan M
Sep 23, 2023, 02:57 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை மதியம் 12:30 மணிக்கு காணொலி மூலம் ஒன்பது வந்தே பாரத் விரைவு இரயில்களை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கும் இரயில் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகளை வழங்குவதற்கும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு படியாகும்.

கொடியசைத்து தொடங்கப்படும் புதிய இரயில்கள்:

உதய்பூர் – ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
திருநெல்வேலி-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
ஹைதராபாத் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
விஜயவாடா – சென்னை (ரேணிகுண்டா வழியாக) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
பாட்னா – ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
ரூர்கேலா – புவனேஸ்வர் – பூரி  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
ராஞ்சி – ஹவுரா  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
ஜாம்நகர்-அகமதாபாத்  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
ராஜஸ்தான், தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்கம், கேரளா, ஒடிசா, ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் இந்த ஒன்பது இரயில்கள் போக்குவரத்து இணைப்பை அதிகரிக்கும்.

இந்த வந்தே பாரத் இரயில்கள் அவற்றின் இயக்கப்படும் வழித்தடங்களில் அதிவேக ரயிலாக இருக்கும், பயணிகளின் கணிசமான நேரத்தை மிச்சப்படுத்த உதவும். இந்த வழித்தடத்தில் தற்போதுள்ள அதிவேக இரயிலுடன் ஒப்பிடும்போது, ரூர்கேலா – புவனேஸ்வர் – பூரி  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் காசர்கோடு – திருவனந்தபுரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை சுமார் 3 மணி நேரம் வேகமாக இருக்கும்.

ஹைதராபாத் – பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 2.5 மணி நேரம் வேகம்; நெல்லை-மதுரை-சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வழக்கமான பயண நேரத்தைக் காட்டிலும் 2 மணி நேரத்திற்கு முன்னதாக சென்றடையும்; ராஞ்சி – ஹவுரா  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்,  பாட்னா – ஹவுரா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜாம்நகர் – அகமதாபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் 1 மணி நேரம்; மற்றும் உதய்பூர் – ஜெய்ப்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சுமார் அரை மணி நேரம் ஆகும்.

நாடு முழுவதும் உள்ள முக்கிய வழிபாட்டுத் தலங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ரூர்கேலா – புவனேஸ்வர் – பூரி  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் திருநெல்வேலி – மதுரை – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகியவை முக்கிய வழிபாட்டு நகரங்களான பூரி மற்றும் மதுரையை இணைக்கும். மேலும், விஜயவாடா – சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரேணிகுண்டா வழியாக இயக்கப்படுவதால் திருப்பதி யாத்திரைக்கு சிறந்த இணைப்பை வழங்கும்.

இந்த வந்தே பாரத் இரயில்களை அறிமுகப்படுத்துவது நாட்டில் ரயில் சேவையின் புதிய தரத்தை பிரதிபலிக்கும். உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் கவாச் தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது.

இந்த இரயில்கள், சாதாரண மக்கள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள், மாணவர் சமூகம் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு நவீன, விரைவான மற்றும் வசதியான பயண வழிமுறைகளை வழங்குவதற்கான ஒரு முக்கியப் படியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: PM Modivandhebharathvandhebharathexpress
Share
Tweet
SendShare
Previous Post

பிரதமர் மோடி வருகை- மின் விளக்குகளால் ஜொலித்த வாரணாசி!

Next Post

நாக்பூரில் கனமழை – குடியிருப்புகளைச் சூழ்ந்த வெள்ளம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies