இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வாரணாசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய அணியின் ஜெர்சியை வழங்கினார்.
வாரணாசி, ராஜதலாப், கஞ்சரியில் கட்டப்படவுள்ள நவீன சர்வதேச கிரிக்கெட் மைதானம், சுமார் 450 கோடி ரூபாய் செலவில் 30 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் உருவாக்கப்படவுள்ளது. இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்வை சிறப்பானதாக மாற்றும் வகையில், பிரதமர் மோடியுடன் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் , ரவி சாஸ்திரி , சுனில் கவாஸ்கர் மற்றும் திலீப் வெங்சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், சச்சின், பிரதமர் மோடிக்கு இந்திய கிரிக்கெட் அணி சட்டையை பரிசாக அளித்தார், அதன் பின்புறத்தில் ‘நமோ’ என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.