இந்தோ-பசிபிக் படைகளின் தலைவர்கள் மாநாடு (IPACC) டெல்லியில் நடைபெறவுள்ளது. 30 நாடுகளுக்கு மேல் நடத்தும் இந்த மாநாடு (IPACC) செப்டம்பர் 25 முதல் 27 வரை நடைபெறும் எனவும் இந்த நிகழ்வு இந்தோ -பசிபிக் படைகள் இடையே வளர்ச்சி பரிமாற்றத்தை உருவாகும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இந்திய ராணுவர் ஒருவர் தெரிவித்தார்.
இதில் பங்கேற்கும் 30க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் நாட்டின் பல்வேறு பிரச்சனைகள் மற்றும் வளர்ச்சி குறித்து விவாதிப்பார்கள் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது .
இந்த மாநாடு பாதுகாப்பு தொடர்பான கருத்துகளையும் பரிமாறிக்கொள்வதற்கும், மேம்படுத்துவதற்கும் ஒரு தளமாக இருக்கும் எனவும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, திடநிலை மற்றும் புரிதலை மேம்படுத்துதல் பற்றி இந்தோ-பசிபிக் பங்குதாரர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த முக்கிய நிகழ்வில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் யுகே உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நட்பு ராணுவத் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.