வளர்ச்சி சார்ந்த சவால்களில் ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
Sep 12, 2026, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சி சார்ந்த சவால்களில் ஒத்துழைப்பு: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 24, 2023, 04:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான குழு ஐ.நா. பொதுச்சபையின் உயர்மட்ட கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தெற்குலக நாடுகளுக்கு இந்தியாவின் தொடா் ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், ‘தெற்குலக நாடுகளின் வளர்ச்சியில் இந்தியா – ஐ.நா.’ என்ற தலைப்பிலான கருத்தரங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதில் அவர் பேசியதாவது, “இந்த ஆண்டு இறுதி வரை நாங்கள் தான் ஜி20-க்கு தலைமையாக இருப்போம். ஜி20 பதவிக்காலம் இருக்கும் போதும், முடிந்த பிறகும், நாங்கள் பங்களிப்பாளராகவும், சிறந்த கூட்டாளியாகவும், கூட்டணி அமைப்பவராகவும் செயல்படுவோம்.

இதன் மூலம் மற்றவர்களையும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ளச் செய்வதில், நாங்கள் உதாரணமாக இருப்போம். எங்களது அனுபவங்கள் மற்றும் சாதனைகளை நல்ல விதத்தில் ஊக்கமளிக்கும் வகையில், உங்களுடன் பகிர்ந்து கொள்வோம் என்று தெரிவித்தார்.

மேலும், இவை பல விதங்களில் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும். ஒத்துழைப்பு விவகாரத்தில், நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே இருந்து இருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆப்பிரிக்க யூனியனை ஜி20-இல் இணைத்ததை நாங்கள் மேற்கோள்காட்டுகிறோம் என்றார். மேலும், இது தொடர்பான ஒத்துழைப்பு ஜி20-இல் மட்டுமின்றி அதை கடந்தும் தொடரும் என்றே நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 26-ந் தேதி 78-வது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் உயர்மட்ட அமர்வில் உரையாற்ற உள்ளார். மேலும், வாஷிங்டனில் செப்டம்பர் 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், வெளியுறவுத்துறைச் செயலர், அமெரிக்க நிர்வாகத்தின் மூத்த உறுப்பினர்கள், அமெரிக்க வணிகத் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்களுடன் இந்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல் நடத்த உள்ளார்.

பின்னர், வாழும் கலை (Art of Living) அமைப்பு நடத்தும் 4-வது உலக கலாச்சார விழாவில் ஜெய்சங்கர் உரையாற்றுகிறார்.

Tags: jaishankerexternal affairs minister
Share
Tweet
SendShare
Previous Post

12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Next Post

இந்தோ-பசிபிக் படைகளின் தலைவர்கள் மாநாடு..!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies