வாட்ஸ் ஆப் சேனலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 50 லட்சத்தைத் தாண்டி இருக்கிறது. இதையடுத்து, வாட்ஸ் ஆப் சேனல் மூலம் தன்னுடன் இணைந்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருக்கிறார்.
பிரதமர் மோடியை எக்ஸ் பக்கத்தில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 91 லட்சத்தையும் தாண்டி இருக்கிறது. அதேபோல, ஃபேஸ்புக்கில் 48 லட்சம் பின்தொடர்வோரும், இன்ஸ்டாகிராமில் 79 லட்சம் பின்தொடர்வோரும் உள்ளனர்.
வாட்ஸ் ஆப் தொடங்கிய முதல்நாளிலேயே பிரதமர் மோடியை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தாண்டியது. இந்த நிலையில், வாட்ஸ் ஆப் சேனல் தொடங்கப்பட்ட ஒரே வாரத்தில் 50 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்திருக்கிறார்கள். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டிருக்கும் பதிவில், “நாங்கள் 50 லட்சத்திற்கும் அதிகமான சமூகமாக மாறியுள்ளதால், எனது வாட்ஸ் ஆப் சேனல் மூலம் என்னுடன் இணைந்த அனைவருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்! உங்கள் ஒவ்வொருவரின் தொடர்ச்சியான ஆதரவிற்கும் ஈடுபாட்டிற்கும் நன்றி. நாங்கள் தொடர்ந்து உரையாடுவோம். இந்த அற்புதமான ஊடகத்தின் மூலம் பல்வேறு பிரச்சினைகளில் இணைக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார்.