கடந்த சில நாட்களுக்கு முன்னர் 5000 கன அடி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டு பின்னர் அதையும் குறைத்துள்ளது.
காவேரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு உரிய தண்ணீர் திறந்து விடாமல் கர்நாடக அரசு தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறது.
இந்நிலையில் காவேரி ஒழுங்காற்று குழு , அடுத்த 15 தினங்களுக்கு தொடர்ந்து 3000 கன அடி நீர் திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து பெங்களூருவில் பந்த் நடந்துள்ளது. மேலும் மாநிலம் தழுவிய அளவில் கர்நாடகத்தில் பந்த் நடந்து வருகிறது .
தமிழகத்திற்கு 3000 கன அடி நீர் திறக்க காவேரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட நிலையில் அதனை பின்பற்ற கர்நாடகா அரசு மறுப்பு வருகிறது.
இதையொட்டி காவேரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் கூட்டப்பட்டது.
இதில் தமிழகம் சார்பில் நீர் வளத்துறை செயலாளர் டாக்டர் மணிவாசன் , காவேரி தொழில்நுட்ப குழு தலைவர் எல் .சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வினாடிக்கு 12,500 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டால்தான் நெற்பயிர்கள் காப்பாற்றப்படும் என்று வலியுறுத்தினார்
இதற்கு கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு டெல்டா மாவட்டத்தின் விவசாயிகள் கவலை அடைத்துள்ளனர் .