காவிரி பிரச்னைக்கு திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம்!- வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
Sep 4, 2025, 05:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

காவிரி பிரச்னைக்கு திமுக, காங்கிரஸ் அரசுகளே காரணம்!- வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 10:42 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் காவிரி பிரச்னையும் வந்து விடுகிறது என பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருந்த காவிரி நதி நீர் பிரச்னை எழவில்லை. காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டிற்கு வழங்கிய வேண்டிய காவிரி நீரை, பாஜக அரசு வழங்கி வந்தது. அனைத்து மாநிலங்களையும் சமமாக நினைக்கும், தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட கட்சி பாஜக என்பதால் இது சாத்தியமானது.

ஆனால், கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே காவிரி நீர் பிரச்னையும் பூதாகரமாகி விட்டது. இத்தனைக்கு காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாட்டை ஆளும் திமுகவும் நீண்டகால நெருங்கிய கூட்டணி கட்சிகள். கர்நாடக காங்கிரஸ் அரசு பதவியேற்பு விழாவுக்கும், இண்டி கூட்டணி கூட்டத்திற்கும் பெங்களூரு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விமான நிலையத்திற்கு வந்து கட்டித்தழுவி வரவேற்றார் கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான சிவகுமார். கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும், முதலமைச்சர் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்தான்.

அது மட்டுமல்ல காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, இன்றைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகமிக நெருக்கமான நண்பர்கள்தான். காங்கிரஸ் தலைமையுடனான நெருக்கம், காங்கிரஸ் உடனான கூட்டணி, இண்டியா கூட்டணியில் முக்கிய இடத்தில் திமுக இருந்தாலும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெற்றுத்தர முடியவில்லை. பல லட்சம் ஏக்கரில் கருகும் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

காங்கிரஸ் கட்சியும், இண்டி கூட்டணியும் கூட்டாட்சி தத்துவத்திற்கும், தேசிய ஒருமைப்பாட்டிற்கும் எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு காவிரி பிரச்னையை கர்நாடக காங்கிரஸ் அரசு கையாள்வதே காரணம். தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரையும் திறக்காமல், சில அமைப்புகளை தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டம், மறியல், முழுஅடைப்பு என பிரச்னையை மேலும் மேலும் பெரிதாக்க, இரு மாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்க திட்டமிடுகிறார்கள். இதற்கு இரு மாநிலங்களில் ஆட்சியில் உள்ள கட்சிகளே காரணம்.

இண்டி கூட்டணியில் காங்கிரஸுக்கு அடுத்த திமுகதான் பெரிய கட்சி. 2024 மக்களவைத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், பிரதமர் யார் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தான் தீர்மானிப்பார். ஸ்டாலினே கூட பிரதமர் ஆகும் வாய்ப்பு உள்ளது என்று திமுக முக்கியத் தலைவர்களே பேசி வருகின்றனர். இந்த அளவுக்கு செல்வாக்கு உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நினைத்தால் தனது நெருங்கிய நண்பர்களான கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோருடன் பேசி, தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை பெற்று, பிரச்னைக்கு சுமூக தீர்வு காண முடியும். இல்லையெனில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே போன்ற தலைவர்களுடன் பேசி தீர்வு காண முடியும்.

ஆனால், ஆட்சி அதிகாரத்தில் மட்டுமே கவனம் செலுத்தும், மகனை எப்போது துணை முதலமைச்சராக்கலாம், முதலமச்சராக்கலாம் என்பதை மட்டுமே சிந்திக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழ்நாட்டு விவசாயிகள் நலனில் கவனம் செலுத்த நேரமும் இல்லை. மனமும் இல்லை. காங்கிரஸ் – திமுக கூட்டணி தொடர்ந்தால் மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாத சக்திகள் தலைதூக்கி, மக்களின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். எனவே, காங்கிரஸ் தலைவர்களுடன் பேசி, காவிரி பிரச்னைக்கு தீர்வு காண முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjpVanathi Srinivasan
ShareTweetSendShare
Previous Post

வேளாண் பல்கலைக்கழகம், ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை!- அண்ணாமலை குற்றச்சாட்டு.

Next Post

ஐஎன்எஸ் ஷல்கி!

Related News

“மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம்” – அமைதியா? போரா? – சீன அதிபரின் சவால்!

எந்தெந்த பொருட்கள், சேவைக்கு வரி விலக்கு?

மேற்குலக நாடுகளே இருக்காது : அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை!

கிருஷ்ணகிரி : புயலால் சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரிக்கை!

ஆனந்த் மகேந்திராவின் கருத்துக்கு பதில் கருத்து தெரிவித்த இணையவாசிகள்!

லண்டன் : விபத்துக்குள்ளான இரண்டு அடுக்கு பேருந்து – பலர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜிஎஸ்டி சீர் திருத்தம் உள்நாட்டு உற்பத்தியில் முதலீட்டை ஊக்குவிக்கும் : Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

கடலூர் : மழைநீர் வடிகால் அமைத்ததாக கூறி ரூ.13 லட்சம் மோசடி!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் – மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை!

ஜப்பானில் விண்வெளி வீரர் என கூறி மூதாட்டியை ஏமாற்றிய இளைஞர்!

ஜம்மு-காஷ்மீர் : வெள்ள பாதிப்பு குறித்து ட்ரோனில் ஆய்வு செய்த ராணுவம்!

கொடிய நோயால் அவதிப்படுகிறாரா ட்ரம்ப்? : ISCHEMIC STROKE குறித்து அலசி ஆராயும் அமெரிக்கர்கள்!

திருச்சி : தலையை துண்டித்து இளைஞர் படுகொலை!

50-க்கும் மேற்பட்ட தெரு நாய்களை வீட்டில் அடைத்துவிட்டு சென்ற வாடகைதாரர்!

பனியன் குடோனில் தீ விபத்து – தீயை போராடி அணைத்த வீரர்கள்!

அமெரிக்க மிரட்டலை மதிக்காத இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies