ஆசிய விளையாட்டுப் பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் வெண்கலம் வென்ற கிரண் பலியான்னுக்கு பாரத பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் 72 ஆண்டுகளுக்கு பிறகு கிரண் பலியான் வெண்கலம் வென்றுள்ளார்.
Indian athletes continue to shine at the Asian Games 2022!
A big congratulations to the exceptional Kiran Baliyan for her amazing achievement in the Shot Put event and winning the Bronze Medal. Her success has delighted the entire nation. pic.twitter.com/EsNQyRzqRB
— Narendra Modi (@narendramodi) September 29, 2023
இந்த வெற்றிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக் குறித்து அவர், ” 2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பிரகாசித்து வருகின்றனர். குண்டு எறிதல் போட்டியில் வியத்தகு சாதனை படைத்து வெண்கலப் பதக்கம் வென்றதற்காக கிரண் பாலியானுக்கு ஒரு பெரிய வாழ்த்துக்கள். அவரது வெற்றி ஒட்டுமொத்த தேசத்தையும் மகிழ்வித்துள்ளது ” என்று பாராட்டியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர், ” பெண்களுக்கான ஷாட் புட் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற கிரண் பலியனுக்கு வாழ்த்துகள். உங்கள் வெற்றி அதிக விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும். தொடர்ந்து வெற்றி பெறுங்கள் ” என்று பதிவிட்டுள்ளார்.