ஆன்லைன் கேமிங்கிற்கு 28% ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஆன்லைன் கேமிங், பந்தயம், சூதாட்ட விடுதிகள், சூதாட்டம், குதிரை பந்தயம் மற்றும் லாட்டரி போன்றவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் கவுன்சில் கூட்டத்தில் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது. ஆன்லைன் கேமிங், சூதாட்ட விடுதிகள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கு வரி விதிப்பதற்குத் தேவையான தொடர்புடைய சட்டங்களைத் திருத்துவதற்கான, செயல்முறையை விரைவுபடுத்த கவுன்சில் தீர்மானித்தது.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழில், ஆன்லைன் கேமிங், பந்தயம், சூதாட்ட விடுதிகள், சூதாட்டம், குதிரை பந்தயம் மற்றும் லாட்டரி ஆகியவற்றிற்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி, இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற 51வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்க முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.