154-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, தேசியத் தலைநகர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் உள்ளிட்ட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் 154-வது ஜெயந்தி நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஜ்காட்டிலுள் மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியும் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார். அதேபோல, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் எல்.ஜி.சக்சேனா உள்ளிட்டோரும், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது நினைத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “காந்தி ஜெயந்தியான இந்த நன்நாளில் நான் மகாத்மா காந்திக்கு தலைவணங்குகிறேன். அவருடைய காலத்தால் அழியாத போதனைகள் நமது பாதையை விளக்கிக் கொண்டே இருக்கின்றன. மகாத்மா காந்தியின் தாக்கம் உலகளாவியது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் ஒற்றுமை மற்றும் இரக்கத்தின் உணர்வை மேம்படுத்துவதற்கு மேலும் ஊக்கமளிக்கிறது. அவருடைய கனவுகளை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம். ஒவ்வொரு இளைஞரும் அவர் கனவு கண்ட மாற்றத்தின் முகவராக, எல்லா இடங்களிலும் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்க்க அவரது எண்ணங்கள் உதவட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.
I bow to Mahatma Gandhi on the special occasion of Gandhi Jayanti. His timeless teachings continue to illuminate our path. Mahatma Gandhi's impact is global, motivating the entire humankind to further the spirit of unity and compassion. May we always work towards fulfilling his…
— Narendra Modi (@narendramodi) October 2, 2023
முன்னதாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, அக்டோபர் 1-ம் தேதி நாடு முழுவதும் தூய்மை இயக்கத்தைத் தொடங்கி வைத்தார், மேலும், ஸ்வச் பாரத் என்பது பகிரப்பட்ட பொறுப்பு. ஒவ்வொரு முயற்சியும் மதிப்புக்குரியது. ஆகவே, நாட்டு மக்கள் அனைவரும் தூய்மை இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, நேற்று நாடு முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் நடந்த தூய்மைப் பணி நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, மல்யுத்த வீரர் அங்கித் பையன் பூரியாவுடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.