லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளையொட்டி, டெல்லி விஜய்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஆகியோரும் மரியாதை செய்தனர்.
நாட்டின் 2-வது பிரதமரான லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி விஜய்காட்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செய்தனர்.
மேலும், லால் பகதூர் சாஸ்திரி ஜெயந்தியை முன்னிட்டு, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “லால் பகதூர் சாஸ்திரியை, அவரது ஜெயந்தியன்று நினைவு கூர்வோம். அவரது எளிமை, தேசத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் இளைய தலைமுறையினரையும் ஊக்குவிக்கும் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ என்கிற முழக்கம் இன்றும் எதிரொலிக்கிறது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் சவாலான காலங்களில் அவரது தலைமை முன்மாதிரியாகத் திகழ்கிறது. வலிமையான இந்தியாவுக்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாம் எப்போதும் உழைப்போம்” என்று தெரிவித்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் 1904 -ல் பிறந்த லால் பகதூர் சாஸ்திரி, 1964 முதல் 1966 வரை இந்தியாவின் 2-வது பிரதமராக இருந்தார். பாகிஸ்தானுடன் தாஷ்கண்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, 1966 ஜனவரி 11-ம் தேதி தனது 61 வயதில் தாஷ்கண்டில் இறந்தார்.
Remembering Lal Bahadur Shastri Ji on his Jayanti. His simplicity, dedication to the nation, and iconic call for 'Jai Jawan, Jai Kisan' resonate even today, inspiring generations. His unwavering commitment to India's progress and his leadership during challenging times remain…
— Narendra Modi (@narendramodi) October 2, 2023