கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்துவரும் நிலையில் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் குடியிருப்புகளில் தேங்கியுள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் அவதியடைந்த நிலையில், போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் தீயணைப்பு வீர்ரகள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.
அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் இதனால் மாவட்டம் முழுவதும், சுமார் 500க்கும் மேற்பட்ட விசைபடகுகள், பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. அதேபோன்று நேற்று இரவு முழுவதும் பெய்த மழை காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள தாழ்வான பகுதி குடியிருப்புகளில் மழை நீர் புகுந்துள்ளது.
குறிப்பாக நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள பாறைக்கால் மடம் என்ற பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. அங்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அவதி அடைந்து உள்ளனர். சாலைகளில் மரங்கள், மரக்கிளைகள் விழுந்து போக்குவரத்து பாதித்துள்ளது, மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தண்ணீரை அகற்றப் போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி பணியாளர்கள் தீயணைப்பு வீர்ரகள் தீவிர பணியாற்றி வருகின்றனர்.