ராம நவமி, பரசுராம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி என ராஜஸ்தானில் கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை. அந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் கலவரங்கள் தடுத்தி நிறுத்தப்படும். குண்டர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
ராஜஸ்தான் ஜோத்பூரில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து கவலை அளிக்கிறது. காங்கிரஸ் அரசு ராஜஸ்தானின் நலனைவிட, தனது வாக்கு வங்கியையே அதிகம் விரும்புகிறது.
காங்கிரஸின் முதல் மற்றும் கடைசிக் கொள்கை சமரச அரசியல் மட்டும்தானா? ராம நவமி, பரசுராம ஜெயந்தி, அனுமன் ஜெயந்தி என ராஜஸ்தானில் கல்வீச்சு நடக்காத இந்துப் பண்டிகைகளே இல்லை. அமைதிக்குப் பெயர் பெற்ற ஜோத்பூர் நகரில் பட்டப்பகலில் கோஷ்டி மோதல் நடக்கிறது. ஜோத்பூர் கலவரத்தில் எரியும்போது, முதல்வர் அசோக் கெலாட் என்ன செய்து கொண்டிருந்தார்? இங்கு வன்முறை வெடித்து அப்பாவிகள் கொல்லப்பட்டபோது, காங்கிரஸ் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
ஒரு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே தனக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார். அப்படியானால், சாதாரணப் பெண்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டும். இதை ராஜஸ்தான் இனி பொறுத்துக் கொள்ளாது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் கலவரங்கள் தடுத்து நிறுத்தப்படும். போக்கிரித்தனமும் ஒடுக்கப்படும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று கூறினார்.