10 ஆண்டுகளுக்கு டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரபல யூடியூப்பர் டி.டி.எஃப். வாசன், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக் ரேஸ் செல்லும் போது, வாகன விபத்தில் சிக்கினார். இது தொடர்பாகக் காஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, சென்னை புழல் சிறையில் வாசன் அடைக்கப்பட்டார்.
டி.டி.எஃப். வாசனுக்கு ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், வாசனின் போக்குவரத்து உரிமத்தை ரத்து செய்ய முடிவு செய்தது.
இதனிடையே, வாசனின் யூடியூப்பை மூடவும், அவரது பைக்கை எரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில், 6.10.2023 முதல் 05.10.2033 வரை 10 ஆண்டுகளுக்குக் காஞ்சிபுரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
டி.டி.எஃப். வாசன் போலப் பிற இளம் தலைமுறையினர் ஆகிவிடக்கூடாது என்பதால் ஓட்டுநர் உரிமத்தை சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக குறிப்பானை வழங்கப்பட்டது.
பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக, அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களின் உரிமங்களும் 10 ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.