ராகு-கேது பெயர்ச்சி பெயர்ச்சியையொட்டிதிருநாகேஸ்வரத்தில் ராகு பகவனுக்குச் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
இன்று மாலை 3.40 மணிக்கு மேல் ராகு பகவான் மேஷத்திலிருந்து இருந்து மீனம் ராசிக்கு மாறினார். இதேபோல கேது பகவான் விருச்சிகம் ராசியிலிருந்து துலாம் ராசிக்கு மாறினார்.
இந்த ராகு-கேது கிரகங்களும் எப்போதும் பின்னோக்கி செல்லக்கூடிய ராசிகளாகும். இந்த பெயர்ச்சியின் காரணமாக, ராகு பகவான், குரு பகவானின் ராசியான மீன ராசியிலும், புதன் அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியில் கேது பகவானும் சஞ்சாரம் செய்ய உள்ளனர். வரும் 25.04.2025-ம் தேதி வரை இந்த ராசிகளில் சஞ்சாரம் செய்கின்றனர்.
ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அதற்கான பலன்களைத் தரக்கூடியவர்கள். ராகு – கேது பெயர்ச்சியையொட்டி, திருநாகேஸ்வரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோவில்களில் சிறப்பு ஹோமம், மகா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்குக் கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் அமைத்துள்ளது திருநாகேஸ்வரம் இராகு பகவான் திருக்கோவில். இந்த கோவிலில் சிவபெருமானை நாக அரசராகிய இராகு பூஜித்தமையால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது.
அப்படி பெருமை வாய்ந்த திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவில் வெளிப்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் இராகு பகவான் தனது இருதேவியருடன் எழுந்தருளி அருட்காட்சி தருகிறார். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த திருக்கோவிலில் உள்ள ராகு பகவான் மீது பால் ஊற்றினால், பால் நீல நிறத்தில் காட்சி தரும்.
இந்த நிலையில், இன்று ராகு – கேது பெயர்ச்சியையொட்டி, திருநாகேஸ்வரம் இராகு பகவான் திருக்கோவிலுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அிதகாலை முதலே வருகை தந்து, வரிசையில் நின்று மனம் உருக சுவாமி தரிசனம் செய்தனர்.
அப்போது, சுவாமிக்குப் பால், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து வண்ண மலர்களால் சுவாமிக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், ராகு பகவனுக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மனம் உருகச் சுவாமி செய்தனர்.
ராகு – கேது பெயர்ச்சியை யொட்டி, கோவில்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.